The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான கிராமம் இருந்துச்சு
அந்த கிராமத்துல தாமிரானு ஒரு குட்டி பொண்ணு வாழ்ந்துகிட்டு வந்தா அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா
அவ ரொம்ப ஏழயா இருந்தாலும் அவுங்க அம்மாவுக்கு உதவி செஞ்சு நல்லபடியா வாழ்க்கை நடத்திக்கிட்டு வந்தா
ரொம்ப ஏழையா இருந்த தாமிராவுக்கு நண்பர்களே கிடையாது எப்பவும் தோட்டத்துலயே விளையாடிகிட்டு இருப்பா
அங்க வர்ற குருவிகூட பேசுறது ,முயல் குட்டியோட விளையாடுறதுனு எப்பவுமே சந்தோசமா இருப்பா
ஒரு நாள் தோட்டத்துக்கு பக்கத்துல சில குட்டி பெண்கள் விளையாடிகிட்டு இருந்தாங்க , உடனே அவுங்க கூட விளையாட போனா தாமிரா
ஆனா அவுங்க தாமிராவோட ஏழ்மை நிலைய கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க
அதனால் அவளுக்கு ரொம்ப அழுகை வந்துச்சு உடனே தன்னோட அம்மாகிட்ட போய் அழுதா தாமிரா
அவுங்க அம்மா சொன்னாங்க உன்ன கிண்டல் பண்றவங்க கிட்ட எதுக்கு நீ போற ,உன்ன நல்லா பார்த்துக்குற எல்லார் கிட்டயும் போ உனக்கு சந்தோசம் கிடைக்கும்னு சொன்னாங்க
உடனே தோட்டத்துக்கு போனா தாமிரா, அங்க காத்துகிட்டு இருந்த முயல் சொல்லுச்சு எதுக்கு அழுதுகிட்டு இருக்க தாமிரானு கேட்டுச்சு ,உடனே நடந்தத சொன்னா தாமிரா
உனக்கு நண்பர்களா நாங்க இருக்கும்போது நீ எதுக்கு அடுத்தவங்களை தேடிப்போறன்னு சொல்லி அவள சந்தோச படுத்துச்சு அந்த முயல்
அப்பத்தான் அரண்மனைல இருந்து ஒரு காவல் காரன் அந்த கிராமத்துக்கு செய்து சொல்ல குதிரைல வந்தான்
நாளைக்கு அரண்மனைல குழந்தைகள் தினம் கொண்டாடுறாங்க ,அதனால எல்லா குழந்தைகளும் அழகான உடை உடுத்தி அரண்மனைக்கு வாங்கனு இந்த நாட்டோட அரசி ஆணை இட்டதா சொன்னான்
இத கேட்ட பக்கத்து வீட்டு பெண்கள் சொன்னாங்க ஆகா எங்க கிட்ட அழகான புது துணிகள் இருக்கு ,நீ என்ன போடுவ தாமிரானு அவள கிண்டல் செஞ்சாங்க
அத கேட்ட தாமிரா ரொம்ப அழுதா ,அப்ப அங்க இருக்குற மரம் சிரிக்க ஆரம்பிச்சுச்சு , ஏன் சிரிக்கிற மரமேனு கேட்டா தாமிரா
அதுக்கு அந்த மரம் சொல்லுச்சு புது துணி எல்லாம் அழகு கிடையாது , உன்கிட்ட இருக்குற துணிய அழகா உடுத்திக்கிட்டு அரண்மனைக்கு போனு சொல்லுச்சு
உடனே அங்க இருந்த முயல் சொல்லுச்சு எங்கிட்ட அழகான ஜரிகைகள் இருக்கு இத உன் உடைய சேர்த்துக்கோனு சொல்லி கொடுத்துச்சு
அடுத்து ஒரு பட்டாம்பூச்சி எங்களோட முன்னோர்கள் கிட்ட இருந்து என்கிட்ட நிறய பட்டு நூல்கள் இருக்கு இதையும் உன் உடலை சேர்த்துக்கோனு சொல்லிக்கொடுத்துச்சு
அடுத்ததா அங்க இருந்த ரோஜா செடி சொல்லுச்சு என்ன உன் தலைல வச்சுக்கோ நீ ரொம்ப அழகா இருப்பனு சொல்லுச்சு
எல்லாத்தையும் கொண்டுபோய் அவுங்க அம்மாகிட்ட கொடுத்தா தாமிரா
அவுங்க அம்மா ஒரு பழைய உடைல அவுங்க கொடுத்த எல்லாத்தையும் வச்சு தச்சு தாமிராவுக்கு போட்டு விட்டாங்க
அந்த உடை பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு ,அரண்மனைக்கு போன தாமிராவோட உடைய பார்த்து எல்லாரும் ஆச்சார்ய பட்டு போனாங்க
பெத்தவங்களுக்கு செலவு வைக்காம தன்கிட்ட இருக்குற உடைய இயற்கயான பொருட்கள் கொண்டு அலங்கரிச்சு வந்த தாமிராவுக்கு “இயற்கையின் இளவரசினு” பட்டம் கொடுத்து பாராட்டுனாங்க அரசி