எலியும் அணிலும் -The Mouse & the Weasel:- ஒரு விவசாய தோட்டத்துல ஒரு அணிலும் ஒரு எலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க
அது ஒரு சோளம் விளைவிக்கும் தோட்டம்ங்கிறதுனால விளைவிச்ச சோளத்த எல்லாம் பக்கத்துல ஒரு குடோன்ல சேமிச்சு வச்சிருந்தாங்க
அந்த குடோனுக்குள்ள போன எலி ஒரு பெட்டிக்குள்ள சோளம் நிறைய இருக்குறத பார்த்துச்சு
அந்த சோளம் வச்சிருக்க பெட்டி நல்லா இருக்கமா மூடி இருந்துச்சு ஆனா ஒரு சின்ன ஓட்ட மட்டும் உள்ள போக இருக்குறத பார்த்துச்சு அந்த எலி
உடனே அந்த ஓட்ட வெளியா உள்ள போச்சு அந்த எலி
உள்ளபோன எலி நிறய சோளத்தை தின்னுச்சு நிறய சோளம் தின்னதால அதோட வயிறு பெருசா ஊதிக்கிடுச்சு
எலியோட வயிறு பெருசானதால அந்த எலி உள்ள போன ஓட்ட வழியா வெளியில வர முடியல
அப்ப அங்க வந்துச்சு அணில் , அதிகமா தின்னுட்டு வெளியில வர முடியாம தவிச்ச எலிய பார்த்த அணில் சிரிச்சிச்சு
நீ எப்பவும் பேராசை காரனா இருக்க ,அதனால தான் அளவுக்கு அதிகமா தின்னுட்டு இப்படி ஆபத்துல சிக்கிக்கிட்ட
நீ உள்ள போறப்ப இருந்த நிலைக்கு திரும்ப வந்தா தான் நீ வெளியில வர முடியும் அது வரை காத்திருன்னு சொல்லுச்சு
ஒருநாளைக்கு அப்புறமா அந்த எலியோட வயித்துல இருந்த சோளம் எல்லாம் செமிச்சு அதோட வயிறு சுருங்கிடுச்சு
இப்ப அந்த எலி சுலபமா வெளியில வந்துச்சு ,தன்னோட தவறை சுட்டி காட்டிய அணிலுக்கு நன்றி சொல்லுச்சு அந்த எலி
நீதி :பேராசை துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கிறது
நீதி : பேராசை பெருநஷ்டம்