Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Most Beautiful Child – அழகிய குழந்தை

The Most Beautiful Child – அழகிய குழந்தை:-அக்பரும் பீர்பலும் பக்கத்து நகரத்துல நகர்வலம் போய்கிட்டு இருந்தாங்க ,அப்பா ஒரு அம்மா தன்னோட நோய்வாய்ப்பட்டு இருந்த குழந்தையை வச்சு கொஞ்சிகிட்டு இருந்தாங்க

அப்ப அக்பர் கேட்டாரு எப்படி அந்த குழந்தைய அந்த அம்மனால கொஞ்ச முடியுதுனு கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு நோய்வாய் பட்டிருந்தா என்ன ,ஒவ்வொரு அம்மாவுக்கும் அவுங்க குழந்தைதான் உலகத்துலயே அழகான குழந்த அதனால தான் அந்த அம்மாவுக்கு அந்த குழந்த எவ்வளவு நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் அழகா தெரியுதுனு சொன்னாரு

பீர்பால் சொன்ன விடை அக்பருக்கு முழு திருப்தி தரல ,உடனே பீர்பால் கூட வந்த மூன்று படை தளபதிகள் கிட்டயும் “இந்த உலகத்துலயே அழகான குழந்தைய உங்க மனைவி கிட்ட சொல்லி கூட்டிட்டு வாங்க ” னு சொன்னாரு

நகர்வலம் முடிஞ்சி வீட்டுக்கு வந்த தளபதிகள் தங்களோட மனைவிங்க கிட்ட அந்த விஷயத்தை சொன்னாங்க

மறுநாள் அரசவைக்கு ஒவ்வொருத்தரும் தங்களோட குழந்தைகளையே கூட்டிட்டு வந்தாங்க

ஏன் உங்க குழந்தைகளையே கூட்டிட்டு வாறீங்கன்னு கேட்டாரு அக்பர்

அதுக்கு ஒரு தளபதி சொன்னாரு அரசே பீர்பால் சொன்னமாதிரி இந்த உலகத்துலயே யார் அழகான குழந்தைனு என் மனைவி கிட்ட கேட்டேன் அவுங்க தான் பெத்த குழந்தைய தான் உலகதுலயே அழகானவங்கனு சொன்னாங்கனு சொன்னாரு

மத்த ரெண்டு பேரும் அதே பதிலையே சொன்னாங்க

அப்ப அக்பருக்கு தெளிவா புரிஞ்சது பீர்பால் சொன்ன மாதிரி ஒவ்வொரு அம்மாவுக்கும் அவுங்க பிள்ளைகள்தான் உலகத்துலயே அழகானவங்கனு.

Exit mobile version