Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்:- ஒரு ஊருல ஒரு தோட்டக்காரன் இருந்தான் ,அவனுக்கு காட்டுக்கு பக்கத்துல ஒரு தோட்டம் இருந்துச்சு ,

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்:- ஒரு ஊருல ஒரு தோட்டக்காரன் இருந்தான் ,அவனுக்கு காட்டுக்கு பக்கத்துல ஒரு தோட்டம் இருந்துச்சு ,

எப்பவும் அந்த தோட்டத்துல அயராது உழைப்பாரு அந்த தோட்டக்காரரு,அது காட்டுக்கு பக்கத்துல இருக்குறதால அங்க இருந்த ஒரு குரங்கு கூட்டம் அவர் செய்யிறத திரும்ப செய்ய ஆரம்பிச்சதுங்க

செடிகளுக்கு அவர் தண்ணி விடுரத பாத்து அதேமாதிரி குரங்குகளும் தண்ணி விட ஆரம்பிச்சதுங்க,அவர் களை பிடிங்குனா குரங்குகளும் களை பிடுங்க ஆரம்பிச்சதுங்க

ஒரு நாள் அவசர வேலையா வெளியூருக்கு போனாரு அந்த தோட்டக்காரர் ,அப்ப அந்த குரங்குகளை கூப்பிட்டு என்னோட தோட்டத்தை நல்லா காவல் பாருங்க ,எல்லா செடிக்கும் தண்ணி விடுங்கன்னு சொன்னாரு

அப்பத்தான் அந்த குரங்கு கூட்டத்துல ஒரு குரங்கு கேட்டுச்சு ஒவ்வொரு செடிக்கும் எவ்வளவு தண்ணி விடணும்னு எங்களுக்கு தெரியாது ,இதனை நாள் நீங்க செஞ்சத பாத்து அப்படியே செஞ்சு பழகிட்டோம்னு சொல்லுச்சு

அது ஒன்னும் பெரிய விஷயமில்லை பெரிய வேர் இருக்குற செடிக்கு அதிக தண்ணீயும் ,சின்ன செடி இருக்குற செடிக்கு கொஞ்சமா தண்ணீயும் விடுங்கன்னு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பி போனாரு அந்த விவசாயி.

கொஞ்ச நாள் கழிச்சி தோட்டத்துக்கு திரும்பி வந்து பாத்தவருக்கு அதிர்ச்சி ,அங்க இருந்த எல்லா செடியும் பிடுங்கி போட்டு காஞ்சு போய் இருந்துச்சு

இது என்ன இந்த குரங்குகள் நல்ல குரங்குகள் ஆச்சே ,நல்லா வேலையும் செய்யுமே இதுங்க எப்படி இப்படி தோட்டத்த அழிச்சதுங்கன்னு யோசிச்சுகிட்டே குரங்கு கூட்டத்தை கூப்பிட்டு கேட்டாரு

அதுக்கு அந்த குரங்குக சொல்லுச்சுங்க ,நீங்கதான பெரிய வேர் உள்ள செடிக்கு அதிக தண்ணியும் ,சின்ன வேர் இருக்குற செடிக்கு கொஞ்சமா தண்ணியும் ஊத்த சொன்னீங்க அதான் ஒவ்வொரு செடியா பிச்சி வேர் எவ்வளவு பெருசா இருக்குன்னு பார்த்தோம்னு சொல்லுச்சுங்க அந்த குரங்குங்க,

இத கேட்ட தோட்டக்காரருக்கு எல்லாம் தன்னோட தப்புதான் ,வேலை எவ்வளவு செஞ்சாலும் அதுங்களோட அறிவ கணக்கிடாததுக்கு தனக்கு கிடைச்ச தண்டனை இதுனு புரிச்சிக்கிட்டாரு

அப்பத்தான் அவருக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வந்துச்சு

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

ஒரு வேலையை ஒருத்தன் சரியா செய்வனானு தெரிஞ்சிகிட்ட பிறகு அவன்கிட்ட அந்த வேலைய கொடுக்கணும்னு அதோட அர்த்தமும் தோட்ட காரனுக்கு புரிஞ்சது

Exit mobile version