Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை

The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை :- ஒரு முறை ஒரு புத்திசாலி அறிஞர் ஒருத்தரு காட்டு வழியா போய்கிட்டு இருந்தாரு

அப்ப ஒரு குரங்கு அங்க படுத்து தூக்கிகிட்டு இருந்துச்சு விளையாட்டா அந்த குரங்கோட வால மிதிச்சாரு அந்த அறிஞர் ,அப்பத்தான் தெரிஞ்சது படுத்து இருந்தது குரங்கு இல்ல அது ஒரு அரக்கன்னு , ரொம்ப கோபமான அரக்கன் தன்னோட வால மிதிச்சா அறிஞர குரங்கா மாறிப்போன்னு சாபம் கொடுத்தான்

உடனே அந்த அறிஞர் குரங்கா மாறிட்டாரு ,சிறு பிள்ளைபோல தான் செஞ்ச தவறினால இப்படி குரங்கா மாறிட்டமேன்னு வறுத்த பட்ட அந்த அறிஞர் அந்த காட்டுலயே வாழ ஆரம்பிச்சாரு ,ஒருநாள் அந்த பக்கமா வந்த பயணிகள் ரெண்டுபேரு ஒரு மரத்தடியில தங்கி இளைப்பாறினாங்க ,அதுல ஒரு பயணி சொன்னாரு நாளைக்கு நம்ம அரண்மனையில ஒரு போட்டி நடக்க போகுது ,அதுல யார் தங்களோட அறிவ காட்டி ஜெயிக்குறாங்களோ அவுங்களுக்கு பிரதம மந்திரி பதவி கொடுக்க போறதா அரசர் அறிவிச்சி இருக்காருன்னு சொன்னாரு

இத மரத்தடியில் இருந்து கேட்ட குரங்கு தானும் அந்த போட்டியில கலந்துக்கிட நினைச்சது ,உடனே பட்டணத்துக்கு போன அந்த குரங்கு போட்டி நடக்குற திடலுக்கு போச்சு , அங்க போட்டிக்கு தயாரா வந்திருந்த அறிஞர்கள் நிக்கிற வரிசையில அதுவும் நின்னுச்சு,அத பார்த்த காவலர்கள் ஆச்சர்ய பட்டு போனாங்க , அந்த குரங்கு போட்டிக்கு பதில் எழுதுற ஓலையில் தன்னோட பேர எழுதி இருந்த பார்த்ததும் ,இந்த குரங்குக்கு வாய் பேச முடியலைனாலும் எழுதி புரிய வைக்கிற திறன் இருக்கு ,அதனால இதுவும் போட்டியில கலந்துகிடலாம்னு அறிவிச்சாங்க

போட்டி திடலுக்கு வந்த அரசர் எது கனமானது இறகா இல்லை கல்லானு? தன்னோட முதல் கேள்வியை கேட்டாரு, எல்லா அறிஞர்களும் தங்களுக்கு தெரிஞ்ச விடைகளை எழுதுனாங்க ,சிலர் அறிவியல் பூர்வமா எழுதுனாங்க,ஆனா குரங்கு “அது சூழலை பொறுத்தது இலகுவான மனசு குற்ற உணர்ச்சி மேலிட்ட பிறகு கனமாக மறுகிறதுனு எழுதி கொடுத்துச்சு குரங்கு , வித்தியாசமான அணுகுமுறைய பார்த்த அரசர் குரங்கையே கவனிக்க ஆரம்பிச்சாரு

அடுத்ததா ஒரு பசியோட இருந்த முதியவருக்கு முன்னாடி அரசு கஜானாவில இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தங்க நாணயத்த வச்சுட்டு , இப்ப இத யாருக்கு கொடுப்பீங்க அரசருக்கா இல்ல பசியில இருக்குற முதியவருக்கானு? கேட்டாரு அரசர்

எல்லா அறிஞர்களும் அரசரை விட பசியோடு இருக்குற முதியவருக்குத்தான் கொடுக்கணும்னு சொன்னாங்க,அதுக்கு குரங்கு என்ன விடை எழுதி இருக்கும்னு எல்லாரும் ஆவலா பார்த்துகிட்டு இருந்தாங்க , அப்ப அரசர் குரங்கு எழுதி இருந்த ஓலையை எடுத்து படிச்சாரு

அதுல இந்த நாட்டுல ஒருத்தர் பசியோட இருக்குறது அரசரோட தவறு ,அவரு கஜானாவுல இருக்குற பணத்த எடுத்து பசியோட இருக்கிறவங்களுக்கு சோறு போட கூடாது ,ஆனா கஜானாவ எதுக்கு அரசருக்கு கொடுத்துருக்காங்கனு புரிஞ்சிகிட்டு , நாட்டுல இருக்குற வரிகளை குறைச்சி , அதே நேரத்துல கஜானாவ வருமானம் உயர்த்தி ,யாருமே பசியோட இருக்காத அளவுக்கு பாத்து கிடனும் ,

அதனால இந்த பணம் அரசருக்கு கொடுத்து அந்த முதியவருக்கு பசி ஏற்படாத வண்ணம் அவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்யணும்னு ,அதுல எழுதி இருந்தது , அப்பத்தான் நடு நிலையா இருந்து யோசிக்கிற குரங்குக்கு பிரதம மந்திரியா வர்றதுக்கு எல்லா தகுதியும் இருக்குனு எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சுச்சு

அப்பத்தான் அரசர் அடுத்த கேள்விய கேட்டாரு ,எல்லாரையும் அரண்மனைக்கு அருகில இருக்குற மாந்தோப்புக்கு கூட்டிட்டு போயி அங்க வாடி போய் இருந்த மாமர செடிகளை காமிச்சு இத எப்படி வளமான செடியா மாத்தலாம்னு கேட்டாரு

அதுக்கு நிறய பேர் இது ஏற்கனவே பெரும் பகுதி செத்துடுச்சு அதனால இத அப்புற படுத்திட்டு புது மாமர செடிய இங்க வைக்கலாம்னு ஆலோசனை சொன்னாங்க ,ஆனா குரங்கு மட்டும் செடிய பார்க்கவே இல்ல , அதே மாதிரி வாடி இருந்த மத்த செடிகளோட வேர் பகுதியில இருந்த மண்ணை ஆரஞ்சுச்சு ,அடுத்ததா வளமா செழிப்பை வளர்ந்து இருந்த செடிகளோட வேர் பகுதியில இருக்குற மண்ணையும் ஆராஞ்சிச்சு

அதுக்கு அப்புறமா தன்னோட ஆலோசனையை ஓலையில் எழுத்துச்சு அந்த குரங்கு ,அதுல இந்த செடிய சுலபமா காப்பதிடலாம் , நான் நல்ல செடி மற்றும் வாடிப்போட செடிகளோட மண் வளத்தை பார்த்தேன் ரெண்டுமே மாதிரி இருந்துச்சு ,அதனால மண்ணுல எந்த பிரச்னையும் இல்ல ,ஆனா இந்த வாடிப்போட செடிகள் மேல அதிகமான நிழல் விழுகுது அதனால் கொஞ்சநாள் நல்ல படியா வளர்ந்தாலும் மரம் ஆகுற அளவுக்கு போதிய வெளிச்சம் இந்த செடிகளுக்கு இல்ல ,அதனால இந்த செடியை பிடுங்கி நல்ல வெளிச்சமா சூரிய ஒளி படுற இடத்துல நட்டா இந்த செடியே நல்ல மரமா மாறும்னு எழுதி இருந்துச்சு

அதுக்கு அப்புறமா குரங்குதான் பிரதம மந்திரினு போட்டி நடத்துன எல்லாரும் சொல்லிட்டாங்க ,உடனே ராஜா நமக்கு நல்ல மந்திரி கிடைச்சிருக்காரு அவரு நம்ம கிட்ட வந்து சேர்ந்த இந்த விஷயத்தை நாம் கொண்டாடணும்னு சொல்லிட்டு ஒரு பெரிய மூட்ட நிறய பொரிய குரங்கு கிட்ட கொடுத்து எல்லாருக்கும் சமமா பகுத்து கொடுங்கன்னு சொன்னாரு

ஆனா அந்த குரங்கு எல்லாருக்கும் முதல்ல கொஞ்சம் பொரிய மட்டும் கொடுத்துச்சு ,அத பசியோட இருந்தவங்க வேகமா சாப்பிட்டு முடிச்சாங்க ,அவுங்களுக்கு இன்னொரு தடவ பொரி கொடுத்துச்சு ,திரும்ப பொரி வேணும்னு கேட்டவர்களுக்கு கொஞ்சம் பொரி கொடுத்துச்சு ,இத பார்த்த அரசருக்கு குரங்கோட அறிவும் பகுத்து கொடுக்கும் போது பசியோட இருக்கவங்களுக்கு அதிகமாவும் , பசி இல்லாதவங்கள கண்டுபிடிச்ச விதத்தையும் பார்த்து குரங்கையே தன்னோட பிரதம மந்திரியா நியமிச்சாரு

அடுத்த நிமிஷம் அந்த குரங்கு திரும்ப அறிஞரா மாறிடுச்சு ,மக்கள் பனி செய்ய ஆரம்பிச்சதும் அவருக்கு இருந்த சாபம் தன்னால நீங்கிடுச்சு ,இத பார்த்த எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க

Exit mobile version