Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Merchant’s Duty – வணிகர்களின் காவல் – Akbar Birbal Story

The Merchant’s Duty – வணிகர்களின் காவல் – Akbar Birbal Story:-அக்பர் ஒருநாள் நகரத்துல இருக்குற எல்லா வியாபாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்புனாரு

அதுல எல்லா வியாபாரிகளும் இனிமே காவல் பணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு

இத பார்த்த எல்லா வியாபாரிகளும் பீர்பால் கிட்ட வந்து உதவி கேட்டாங்க,பீர்பால் அவர்களே நாங்க ரொம்ப வருசமா வியாபாரம் மட்டுமே செஞ்சுட்டு இருக்கோம் எங்களால எப்படி காவல் பணி செய்யமுடியும்னு கேட்டாங்க

அதுக்கு பீர்பால் ஒரு யோசன சொன்னாரு

அதுபடி எல்லாரும் காவல் பணிக்கு போனாங்க ,அவுங்களோட காவல் பணி எப்படி இருக்குனு பாக்க அக்பர் நகர்வலம் வந்தாரு

அப்ப ஒரு வணிகர் வந்தாரு அரசே இந்த காவல் வாகனம் ,ரொம்ப பலசா இருக்கு ,இதோட மதிப்பு ரொம்ப கம்மி ,அடுத்த தடவ காவல் வாகனம் வாங்கும்போது தகுதி என்னானு பாத்து வாங்குங்கன்னு சொன்னாரு

அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இந்த குதிரையோட கால் வளைஞ்சிருக்கு ,இதோட மதிப்பு ரொம்ப கம்மி ,அடுத்தாதவ குதிரை வாங்குறப்ப ,400 கிலோவுக்கு அதிகமா இருக்குற குதிரைய வாங்குங்கன்னு சொன்னாரு

அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இங்க இருக்குற ஈட்டி எல்லாம் துருபிடிச்சி இருக்கு ,புது ஈட்டி செய்யும்போது வெண்கலம் கலந்த ஈட்டி வாங்குங்கன்னு சொன்னாரு

இத எல்லாம் கேட்டுட்டே வந்த அக்பர் ,பீர்பால் கிட்ட சொன்னாரு எதுக்கு இவுங்க இதுமாதிரி பேசிக்கிட்டே இருக்காங்க னு கேட்டாரு

அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே ,இவுங்க பல வருசமா வியாபாரம் பண்ணியே பழக்கமானவங்க நீங்க இவுங்கள காவல் பணி இல்ல,எந்த வேலை கொடுத்தாலும் அவுங்க புத்தி மாறவே மாறாது

அவுங்க கிட்ட கிடைக்குற எல்லாத்தையும் நிறை குறைகளை அலசி ஆராஞ்சு பார்த்துகிட்டே தான் இருப்பாங்கனு சொன்னாரு

தன்னோட தவற உணர்ந்த அரசர் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிட்டாரு

உடனே அந்த வியாபாரிங்க எல்லாரும் பீர்பாலுக்கு நன்றி சொன்னாங்க

Exit mobile version