Site icon தமிழ் குழந்தை கதைகள்

வியாபாரியும் முட்டாள் முடிவெட்டுபவரும் -The Merchant and the Foolish Barber Story in Tamil

வியாபாரியும் முட்டாள் முடிவெட்டுபவரும் -The Merchant and the Foolish Barber Story in Tamil:- ஒரு ஊருல சிங்காரம்னு ஒரு வியாபாரி இருந்தாரு, அவருக்கு ரொம்ப ஈகை குணம் இருந்துச்சு,தினமும் யாருக்காவது உதவிகிட்டே இருப்பாரு அவரு

ஒருநாள் வருக்கு வரவேண்டிய பொருள் எல்லாம் கொண்டு வந்த கப்பல் கடல்ல கவுந்துடுச்சு

அதுக்கு அப்புறமா சிங்காரத்தோட நண்பர்கள் கூட அவரை விட்டுட்டு போயிட்டாங்க, தன்னோட சொத்து எல்லாத்தையும் வித்து தன்னோட கடன் எல்லாத்தையும் அடிச்சிட்டு வெறும் வீட்டுல உக்காந்து இருந்தாரு சிங்காரம்

சிங்காரத்தோட கனவுல ஒரு முனிவர் வந்தாரு அவரு ஒரு குச்சியை சிங்காரத்துக்கிட்ட கொடுச்சு என் தலையில லேசா தட்டுன்னு சொன்னாரு உடன்வே சிங்காரமும் லேசா தட்டுனாரு உடனே அவரு தங்க குவியலா மாறிட்டாரு

தூக்கத்துல இருந்து எந்திரிச்ச சிங்காரத்துக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு

அப்ப அங்க வந்த முடி வெட்டும் தொழிலாளி கூட முடி வெட்ட உக்காந்தாரு அப்ப அங்க வந்தாரு ஒரு முனிவர்

அவரு கைல ஒரு குச்சியும் இருந்துச்சு அந்த குச்சிய சிங்காரத்துக்கிட்ட கொடுத்தாரு , தன்னோட கனவு மாதிரியே இருக்குன்னு உடனே அந்த முனிவரோட தலைல லேசா தட்டுனாரு உடனே அவரு தங்க குவியலா மாறிட்டாரு

இத பாத்த முடி வெட்டுறவறு குழப்பமடைஞ்சாரு,சிங்காரம் தனுக்கு கிடைச்ச தங்கத்துல ஒரு பகுதியை அவருக்கு கொடுத்து அனுப்புச்சாறு

தங்கம் கிடைச்சாலும் அதுல திருப்தி அடையாத அந்த முடி வெட்டுறவர் ஒரு குச்சிய எடுத்துக்கிட்டு ஊருல இருக்குற எல்லா சாமியாரையும் தலைல தட்டிகிட்டே இருந்தாரு

கோபமான ஊர்க்காரங்க அந்த முடி வெட்டுறவர புடிச்சி அரசார்கிட்ட கூட்டிட்டு போனாங்க

நடந்தத சிங்காரத்துக்கிட்ட கேட்டு தெரிச்சுக்கிட்ட அரசர், தனக்கு கிடைச்ச தங்கத்த போதும்னு நினைக்காம மேலும் தவறு செஞ்சதால அவன சிறைல அடைக்க உத்தரவிட்டாறு

Exit mobile version