Site icon தமிழ் குழந்தை கதைகள்

முட்டாள்களின் பட்டியல் – The List of Fools – Akbar Birbal Sotries in Tamil

முட்டாள்களின் பட்டியல் – The List of Fools – Akbar Birbal Sotries in Tamil:-ஒருதடவ ஒரு அரேபிய வியாபாரி அக்பர் கிட்ட வந்தாரு

எங்கிட்ட நிறைய குதிரைகள் இருக்கு அத வாங்கிக்கோங்கன்னு சொன்னாரு ,அந்த குதிரைகளை பார்த்ததும் அக்பருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதனால அவர்கிட்ட இருந்த எல்லா குதிரையையும் அக்பரே வாங்கிக்கிட்டாரு

அதுக்கு அப்புறமா என் கிட்ட இன்னும் நிறைய குதிரை எங்க நாட்டுல இருக்குனு சொன்னாரு ,உடனே அரசர் அவருக்கு ரெண்டு லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்து ,அந்த குதிரைகளை கொண்டுவந்து கொடுக்க சொன்னாரு

அவர் போய் சில மாதங்கள் ஆகியும் திரும்பி வரல ,அக்பருக்கு கவலையா போச்சு

இப்படி இருக்கும்போது ஒருநாள் அக்பர் பீர்பால் கிட்ட ,நம்ம நாட்டுல இருக்குற முட்டாள்களோட பட்டியல் தயார் செய்ய சொன்னாரு

அரசே எங்கிட்ட அந்த பட்டியல் ஏற்கனவே தயாரா இருக்குனு சொல்லி ,ஒரு பட்டியலை கொடுத்தாரு

அந்த பட்டியல வாங்கி பார்த்த அரசருக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,ஏன்னா அந்த பட்டியல்ல முதல் பேரா அக்பரோட பேருதான் இருந்துச்சு

இத பார்த்த அக்பர் கோபத்தோட இது என்ன என்பேர் முதல்ல இருக்குனு கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு ,யாருனே தெரியாத வியாபாரிகிட்ட முன்பணம் கொடுத்த நீங்க தான் அரசே முதல் முட்டாள்னு சொன்னாரு பீர்பால்

இல்ல இல்ல அந்த வியாபாரி கண்டிப்பா திரும்பி வந்து எனக்கு குதிரைகளை கொடுப்பாருனு சொன்னாரு

அதுக்கு சிரிச்சிகிட்டே பீர்பால் சொன்னாரு ,அப்ப உங்க பேர எடுத்துட்டு அவரோட பேர முதல்ல எழுதிடலாம்னு சொன்னாரு பீர்பால்

Exit mobile version