The Lion & the Ass – சிங்கமும் கழுதையும் :- ஒரு காட்டு ராஜாங்கம் இருந்துச்சு
அந்த ராஜாங்கத்தை ஒரு பெரிய சிங்கம் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்துச்சு
ஒருநாள் ஒரு பெரிய திருவிழா ஒன்னு அந்த காட்டுக்குள்ள கொண்டாடுனாங்க
அத வேடிக்கை பார்க்க எல்லா காட்டு மிருகங்களும் ராஜாவோட குகைக்கு பக்கத்துல இருக்குற பெரிய இடத்துக்கு வந்தாங்க
அப்ப சிங்கராஜா கம்பீரமா அந்த வீதியில நடந்து வந்தாரு ,
அத பார்த்த எல்லா மிருகங்களும் ராஜாவுக்கு மரியாதை செஞ்சுச்சுங்க
ஆனா கழுத மட்டும் ராஜா போனது அப்புறமா புறணி பேச ஆரம்பிச்சுச்சு
இவரு என்ன பெரிய வீரனா , சிங்கதுக்கு வயசாகிடுச்சு ,அது அழகாவே இல்லனு வாய்க்கு வந்தது எல்லாம் பேசுச்சு
அந்த கழுதையோட பேச்சு சிங்கராஜாவுக்கு நல்லாவே கேட்டுச்சு
ஆனா உயரிய இடத்துல இருந்த சிங்கம் இந்த வீண் பேச்சுக்களை புறந்தள்ளிட்டு காட்டு மிருகங்ளுக்கு வணக்கம் சொல்லி திருவிழாவை நடத்த ஆரம்பிச்சுச்சு
நீதி : தன பலம் அறிதல் தலைவனுக்கு அழகு
நீதி : வீண்பேச்சுக்களை தவிர்ப்பதே வெற்றிக்கு வழி