சிங்கமும் விரகு வெட்டுபவரும் – The Lion and the Wood Cutter Story in Tamil:- ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சு , அதுக்கு ஒரு காகமும் நரியும் கூடவே இருந்துச்சு.
சிங்கம் வேட்டையாடுற மிருகத்தோட மிச்சத்த அந்த காக்காவும் நரியும் சாப்பிடுறது வழக்கம்
ஒருநாள் அந்த சிங்கம் காட்டு வழியா நடந்து போச்சு அங்க ஒரு மரம் வெட்டுறவர் மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு
புத்தி சாலியான அந்த மரம் வெட்டுறவர் சிங்கத்த பாத்து பயப்படாம வாங்க வணக்கம் சிங்கராஜான்னு சொன்னாரு
வணக்கமா என்ன பாத்து பயம் வரலயான்னு கேட்டது சிங்கம்
இல்லையே உங்களுக்காக நான் தினமும் பருப்பு சோறு கொண்டுவருவேன் நீங்க வராததால அத நானே சாப்ட்ருவேன் அப்படின்னு சொன்னாரு
என்னது சாப்பிட நான் வேட்டையாடி மிருகத்த சாப்பிடுறவன் , எனக்கு சைவ சாப்பாடா அப்படின்னு கேட்டுச்சு
அவர் வற்புறுத்தவே அந்த சாப்பாட சாப்பிடுச்சு அந்த சிங்கம்,அந்த சாப்பாடு நல்லா இருந்ததால ரொம்ப நன்றி சொல்லுச்சு அந்த சிங்கம்
தினமும் அந்த சாப்பாட்ட விரும்பி சாப்பிட்ட அந்த சிங்கம் அந்த வரகு வெட்டுறவர் கூட நண்பனா மாறிடுச்சு
அந்த மரம் வெட்டுறவர் மட்டும் ஒரு சத்தியம் கேட்டாரு, சிங்க ராஜா சிங்க ராஜா எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுங்க தினமும் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வர்றேன் ஆனா இந்த விசயத்த யாரு கிட்டயும் சொல்ல கூடாது, யார் கூடையும் சேந்து என்கிட்டே வரக்கூடாது அப்படின்னு சொன்னாரு
சிங்கமும் ஒத்துக்கிடுச்சு,சிங்கத்தோட போக்கு புரியாத காகமும் நரியும் குழம்பி போச்சு
இந்த சைவ சாப்பாடு வழக்கத்த மறைஞ்சிருந்தது பாத்த காகம்,நரி கிட்ட வந்து சிங்கம் இனி வேட்டையாடாது அந்த சிங்கத்த நம்புனா நமக்கு சாப்பாடு கிடைக்காதுன்னு சொல்லுச்சு
புத்திசாலியான நரி சிங்கத்துக்கிட்ட வந்து ஏன் நீங்க சைவமா மாறிடீங்க உங்க சைவ சாப்பாட நாங்க சாப்டு பாக்கணும்னு சொல்லுச்சு
மறுநாள் ரெண்டுபேரையும் கூட்டிட்டு மரம் வெட்டுறவர் கிட்ட கூட்டிட்டு போச்சு
தூரமாவே மூணுபேரும் வர்றத பாத்த மரம் வெட்டுறவர் மரத்து மேல ஏறிக்கிட்டாரு
சிங்கம் கேட்டது என்ன நண்பரே இப்படி பயப்படுறன்னு கேட்டாரு,அது அவர் சொன்னாரு நீங்க ஒரு சத்தியத்த மீறிட்டிங்க
உங்க நண்பர்களால என்னோட சத்தியத்த மீர வைக்க முடியும்னா என்ன சாப்பிட வைக்கவும் முடியும் அப்படின்னு சொன்னாரு