Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Light in the Garden- Mulla Tamil Story-முல்லா நகைச்சுவை கதை

The Light in the Garden- Mulla Tamil Story-முல்லா நகைச்சுவை கதை:-முல்லாவுக்கு பொறாம குணத்தோட இருக்குறவங்களை பார்த்தாலே ஆகாது,, எப்பவாவது அவங்க கூட பேச வேண்டிய நிலைம வந்துச்சுன்னா அவங்களுக்கு ஏண்டா இந்த ஆளு கிட்ட பேச ஆரம்பிச்சோன்னு நினைக்கிற அளவுக்கு ஏதாவது செஞ்சு விட்டுருவாரு முல்லா

அப்படித்தான் ஒரு புது வியாபாரி முல்லா ஓட வீட்டு பக்கத்துல குடி வந்தாரு அவருக்கு அடுத்தவங்க நல்லா வாழறத பார்த்தா ரொம்ப வயிறு எரியும் அதனாலேயே ரொம்ப பொறாமை பட்டாரு,

ஒரு நாளு முல்லா தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு அப்ப அங்க வந்த அந்த பொறாமை பிடித்தவர் ஐயா என்ன உங்க தோட்டத்து தென்னை மரம் எல்லாம் இவ்வளவு உயரமா வளந்து இருக்கு என் தோட்டத்தில எல்லாம் இவ்வளவு உயரமா தென்னைமரம் வளர்ந்ததே கிடையாது அப்படின்னு பேச்ச ஆரம்பிச்சாரு

அந்த ஒரு நிமிஷத்திலேயே தன் கிட்ட பேச வந்த மனுஷன் பொறாமை குணம் உடையவர்னு புரிஞ்சுகிட்டாறு முல்லா,மறுநாள் காலையில தன்னோட கழுதய குளிப்பாட்டி கிட்டு இருந்தாரு முல்லா, அப்ப அங்க வந்த பொறாமை புடிச்ச பக்கத்து வீட்டுக்காரரு, அடடா உங்க கழுதை குதிரை மாதிரி நல்லா திடகாத்திரமா இருக்கே அப்படின்னு சொன்னாரு இதைக் கேட்ட முல்லா இந்த ஆள ஒரு வழி பண்ணி ஆகணும்ன்னு முடிவு பண்ணாரு

அப்பத்தான் அந்த பொறாமை புடிச்ச பக்கத்து வீட்டுக்காரர் என்னோட வீடு ரொம்ப இருட்டா இருக்கு ஆனா பாருங்க உங்க வீட்ல எப்பயும் சூரிய வெளிச்சம் நல்லா உள்ள வருது அப்படி இல்லனாலும் நிலா வெளிச்சத்துல உங்க வீடு அரண்மனை மாதிரி ஜொலிக்குது

எனக்கு வாச்சு இருக்க வீட பாருங்க அங்க எங்கேயும் வெளிச்சமே இருக்காது எப்பயும் இருட்டு தான் சூரிய வெளிச்சம் நல்லா அடிக்கிறப்ப கூட எங்க வீடு இருட்டா தான் இருக்கு அப்படின்னு சொல்லி புலம்ப ஆரம்பிச்சாரு

அப்பத்தான் முல்லா சொன்னாரு இந்த இடத்த பார்த்தீர்களா இந்த இடம் எவ்வளவு வெளிச்சமா இருக்கு அப்படின்னு, உடனே அந்த புது வியாபாரியும் ஆமா இந்த இடம் ரொம்ப வெளிச்சமாத்தான் இருக்கு அப்படின்னு சொன்னாரு

அப்பதான் சொன்னாரு நீங்க ஒன்னு செய்யுங்க வேகமா வீட்டுக்கு போயி உங்க வீட்டை மெதுவா தள்ளி இங்கே கொண்டு வந்து வச்சுருங்க அப்பத்தான் உங்க வீடு எப்பயும் வெளிச்சமா இருக்கும் அப்படின்னு சொன்னாரு

அடடா இது என்ன முட்டாள்தனமா இப்படி ஒரு ஐடியாவை கொடுக்கிறார் இந்த ஆளு அப்படின்னு பேச ஆரம்பிச்ச அந்த பொறாமை புடிச்ச வியாபாரிக்கு அப்பத்தான் முல்லா ஏன் அப்படி பேசினாருன்னு லேசா புரிய ஆரம்பிச்சுருச்சு உடனே எதுவும் சொல்லாம அமைதியா அங்கேயே நின்னாரு

ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் வெவ்வேறு நிலையில வெவ்வேறு சூழ்நிலையால மாறி மாறி அமைஞ்சிருக்கு அவருக்கு இப்படி இருக்கு இவருக்கு இப்படி இருக்கு அப்படின்னு சொல்லி அடுத்தவங்க மேல பொறாமை பட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா உங்க வாழ்க்கையே நீங்க வாழவே முடியாது அப்படின்னு அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பிச்சாரு முல்லா

அன்னையிலிருந்து அடுத்தவங்களை பார்த்து பொறாம படாம அடுத்தவங்க மாதிரி வாழனும்னு நினைச்சோம்னா அதுக்கான உழைப்பு நம்ம கொடுக்கணும்ன்ற உண்மையை புரிஞ்சிகிட்ட அந்த வியாபாரி கடுமையா உழைக்க ஆரம்பிச்சாரு

Exit mobile version