Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Legend Of The Easter Egg – ஈஸ்டர் முட்டைகள்

The Legend Of The Easter Egg – ஈஸ்டர் முட்டைகள்:- ஒரு கிராமத்துக்கு பக்கத்துல ஒரு பண்ணை வீடு இருந்துச்சு

அங்க ஜான் ஜெனினு ரெண்டு குட்டி குழந்தைகள் இருந்துச்சுங்க

அது கிறிஸ்த்துமஸ் காலம் கிறதால ஈஸ்டர் முட்டைகளை கண்டுபிடிக்கிற விளையாட்டை எல்லா குழந்தைகளும் விளையாடிகிட்டு இருந்துச்சுங்க

அப்ப தோட்டத்துக்கு வந்த ஜெனி ஜானயும் கூட்டிகிட்டு முட்டைகளை தேட ஆரம்பிச்சா

அப்பதான் ஈஸ்டர் முட்டை தேடுறது எதுக்காக ,ஈஸ்டர் விழாவுக்கும் இந்த முட்டை கண்டுபிடிக்கிற விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்னு ஜெனி கிட்ட கேட்டான் ஜான்

ஈஸ்டர் முட்டைய கண்டு பிடிக்கிறதுதான் விளையாட்டு ,அதோட அர்த்தம் தெரியணும்னு நீ தான் கண்டுபிடிக்கணும்னு சொன்னா ஜெனி

அப்பத்தான் அங்க ஒரு புதற்குள்ள நிஜ கோழி கத்திகிட்டே வெளிய வந்துச்சு ,அந்த கோழி வெளிய வந்ததும் ஜெனி அந்த இடத்தை தேடி பார்த்தா

அங்க நிறய முட்டைகள் இருந்துச்சு ,அத எல்லாத்தையும் தன்னோட கூடையில பத்திரமா எடுத்துக்கிட்டா ஜெனி

அன்னைக்கு ராத்திரி தூக்கிகிட்டு இருந்த ஜான அவுங்க அம்மா எழுப்புனாங்க, குளிர் நேரத்துல சொட்டர் போடாம தூங்க கூடாதுனு அவனுக்கு சொட்டர் போட்டு விட்டாங்க

அப்ப கோபமா அங்க வந்த அவனோட அப்பா ,இன்னைக்கு நீயும் ஜெனியும் எங்க சுத்த போனீங்க , என்ன அசுத்தமான பொருளை எல்லாம் தொட்டீங்கனு கேட்டாரு

அதுக்கு ஜான் ஈஸ்டர் முட்டை தேடி போன கதைய சொன்னான் ,சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சான்

காலைல எழுந்திருச்சு பார்க்கும்போது அவன் வேற ஒரு எடத்துல இருந்தான்

இது என்ன புது இடம்னு குழம்பிப்போன ஜான் ,அங்க யாராவது இருக்காங்களான்னு பார்த்தான்

அப்பத்தான் அவனோட மிட்டாய்கடை மாமாவோட வீடு அதுனு அவனுக்கு புரிஞ்சது

அவன்கிட்ட வந்த அவனோட மாமா சொன்னாரு ,ஜெனிக்கு காய்ச்சல் அடிக்கிது , அது பரவர வைரஸ் காய்ச்சலா கூட இருக்கலாம் ,அது உனக்கு வந்திரக்கூடாதுனு உன்னோட பெற்றோர்கள் உன்ன இங்க தூக்கிட்டு வந்து படுக்க வச்சிட்டு போனாங்கனு சொன்னாரு

ஜெனிக்கு நல்ல படியா குணமகனும்னு வேண்டிகிட்ட ஜான் ,அது விடுமுறை காலம்கிறதால மாமாவோட மிட்டாய் கடையில சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆரம்பிச்சான்

மாமாவும் அத்தையும் அவன ரொம்ப பாத்திரமா பார்த்துக்கிட்டாங்க ,அங்க இருக்குற மிட்டாய்கள் எல்லாத்தையும் சாப்பிடவும் அவனுக்கு அனுமதி கொடுத்தாங்க

மிட்டாய்களை தின்னுகிட்டு , சின்ன சின்ன வேலைகள் செஞ்சுகிட்டு ஜாலியா இருந்தாலும் ஜெனியோட உடம்னு எப்ப குணமாகும்னு சின்ன கவலை அவனுக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சு

ஒருநாள் அங்க இருக்குற தோட்டத்துக்கு விளையாட போனான் ஜான், அங்க இருக்குற மரத்து மேல குருவி ஒன்னு கூடுகட்டி வாழ்ந்துகிட்டு இருக்குறத பார்த்தான் ஜான்

அப்ப அங்க ஒரு பெரிய பருந்து கூட்டம் அந்த குருவி கூட்ட தாக்க வந்துச்சு

அந்த பருந்து கூட்டம் அந்த சின்ன கூட்ட பிச்சு போடா போகுதுனு பயந்தான் ஜான்

உடனே ஒரு சின்ன கல்ல எடுத்து அந்த பருந்துகளை விரட்டி அடிச்சான்

வீட்டுக்கு அசுத்தமா வந்த ஜானை பார்த்த அவுங்க அத்த ஏன் இப்படி அசுத்தமா இருக்கன்னு கேட்டாங்க ,அதுக்கு அவன் குட்டி குறிவிய காப்பாத்துன கதையை சொன்னான்

அப்பத்தான் ஏன் அந்த பருந்துகள் குட்டி குருவியோட கூட்ட உடைக்க பார்த்துச்சுனு கேட்டான் ,அதுக்கு அவுங்க அத்தை சொன்னாங்க குட்டி குருவிகளோட முட்டைய எடுத்து திங்கிறதுக்கு தான் அந்த பெரிய மாமிச உண்ணி பருந்துகள் முயற்சி பண்ணுதுனு சொன்னாங்க

அப்பத்தான் அவனும் ஜெனியும் நிஜமான கோழி முட்டையை எடுக்க போனது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு ,உடனே அவுங்க மாமா கிட்ட இதப்பத்தி சொன்னான்

உடனே ஜானோட வீட்டுக்கு போன அவுங்க மாமா , அங்க இருந்த வைத்தியர்கிட்ட கோழி வசிக்கிற இடத்துல இருக்குற இந்த குழந்தை விளையாண்ட கதையை சொன்னாரு

உடனே பறவைகள் மூலமா பரவர காய்ச்சலுக்கான மருந்தை அந்த மருத்துவர் ஜெனிக்கு கொடுத்தாரு ,ஜெனி கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சா

இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு ஜான் தனியாவே இருக்கட்டும்னு எல்லாரும் முடிவு செஞ்சாங்க

அவனுக்கு சுகாதாரம் பத்தி நிறைய சொல்லி கொடுத்தாங்க அவுங்க அத்தை ,எப்ப வெளியில போயிட்டு வந்தாலும் அவனோட கால்களை கழுவி விட்டு அவனை சுத்தா இருக்க பழக்குநாங்க

ஒருநாள் அவனையும் கூட்டிட்டு அங்க இருக்குற ஒரு சர்ச்சுக்கு போனாங்க எல்லாரும் ,அப்பத்தான் அங்க இருக்குற பாதிரியார் ஜீசஸ் கதையை சொன்னாரு

அவர் கதையை முடிக்கும்போது முட்டைக்குள்ள இருந்து வெளிவந்த புது உயிர் போல அந்த குகைக்குள்ள இருந்து ஆண்டவர் வெளியே வந்தார்னு சொன்னாரு

அப்பத்தான் ஜானுக்கு புரிஞ்சது முட்டை என்பது புது வாழ்வின் தொடக்கத்தின் அடையாளம்னு இத எல்லா குழந்தைகளுக்கு தெரியப்படுத்த இந்த ஈஸ்டர் முட்டை விளையாட்டை விளையாடுறாங்கனும் தெரிஞ்சிகிட்டான்

நேரா வீட்டுக்கு வந்த ஜான் அங்க ஜெனி முழுசா குணமடைஞ்சு நல்லபடியா இருக்குறத பார்த்தான்

காய்ச்சல் வந்து ரொம்ப கஷ்டப்பட்ட ஜெனிக்கு இது ஒரு புதிய வாழ்வு , இந்த தொடக்கம் அவளுக்கு நல்ல ஆரோக்கியதை கொடுக்கணும்னு தொடர்ந்து வேண்ட ஆரம்பிச்சான்

ஈஸ்டர் முட்டை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட விக்கி பீடியா வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

Exit mobile version