Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன்

அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும்

ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான்

உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான்

பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள போயிட்டான்

அடடா கட்டோட நடுவுல வந்துட்டமே இப்ப எப்படி வீட்டுக்கு போறதுன்னு யோசிச்சுகிட்டே நடக்க ஆரம்பிச்சான்

அப்ப முன்னாடி ரெண்டு கால்கள் இல்லாத ஒரு நரிய பாத்தான் உடனே அவனுக்கு ஒரே பாவமா போச்சு

இந்த நரிக்கு எப்படி கடவுள் உணவு கொடுப்பாரு அப்படினு யோசிச்சுகிட்டே இருந்தான்

அப்பத்தான் அங்க ஒரு சிங்கம் வந்துச்சு அது தன்னோட வாய்ல இருந்து ஒரு கரி துண்ட நரிக்கு பக்கத்துல போட்டுச்சு

இது என்ன ஆச்சரியம் நரிய வெறுக்குற சிங்கம் அந்த நரிக்கு சாப்பாடு கொடுக்குது

அடடா கடவுளோட கருணையை கருணை இப்படி எல்லா உயிருக்கும் உணவு கொடுக்குற கடவுள் தனக்கும் உணவு கொடுக்க ஏதாவது செய்வாருன்னு சொல்லிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சான்

ஒரு வழியா தன்னோட கிராமத்துக்கு வந்த அவன் தன்னோட நண்பன பாத்தான்

அவன் ஒரு ரொட்டியும் பாலும் மாதவனுக்கு கொடுத்தான்

அவன்கிட்ட நடந்த கதையை சொன்னான் , அதுக்கு அந்த நண்பன் சொன்னான்

கடவும் ஒவ்வொருத்தருக்கும் உணவு கொடுக்க ஒவ்வொருத்தர நியமிக்கிறாரு அப்படி நியமிக்க பட்டத்துதான் அந்த சிங்கம்

நீ எப்பவும் அந்த இயலாத நரி போலவே இருக்க விரும்புற ,ஆனா நீ அந்த உணவு கொடுத்த சிங்கம் மாதிரி நடந்துக்க முயற்சி செய்னு சொன்னான்

தன்னோட சோம்பேறித்தனத்தால ஏற்பட்ட அவமானத்த எல்லாத்தையும் நினச்சு பாத்து திருந்துநான் மாதவன்

அப்பதான் அவனுக்கு ஒரு திருக்குறள் ஞபாகத்துக்கு வந்துச்சு

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை

Exit mobile version