Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Lark & Her Young Ones – மைனாவும் அதன் குஞ்சுகளும்

The Lark & Her Young Ones – மைனாவும் அதன் குஞ்சுகளும் :- ஒரு ஊருல ஒரு பெரிய கோதுமை வயல் இருந்துச்சு

அந்த கோதுமை வயலுக்கு நடுவுல ஒரு மைனா கூடுகட்டி குஞ்சு பொரிச்சிருந்துச்சு

அந்த குஞ்சுகள் ரொம்ப சின்னதா இருந்ததால அதுங்களால பறக்க முடியல அம்மா மைனா கொடுக்குற சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்துகிட்டு இறுந்துச்சுங்க

ஒருநாள் அந்த கோதுமை வயலோட முதலாளி அங்க வந்தாரு ,கோதுமை எல்லாம் ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு உதவிக்கு யாராவது கிடைச்சா நாளைக்கே அறுவடை செஞ்சிடலாம்னு சொன்னாரு

அத கேட்ட மைனா குஞ்சுகள் ரொம்ப பயந்து போச்சுங்க அடடா கோதுமைய அறுவடை செஞ்சா நம்ம கூட்டையும் பிச்சி போட்டுடுவாங்க நமக்கு ஆபத்துனு சொல்லுச்சுங்க

அத கேட்ட அம்மா மைனா பயப்படாதீங்க நாளைக்கு அறுவடை செய்ய மாட்டாங்கன்னு சொல்லுச்சு

அதுமாதிரியே மறுநாள் அந்த விவசாயி அறுவடை செய்யவே இல்ல

கொஞ்ச நாளுக்கு அப்புறம் அங்க வந்த விவசாயி பக்கத்து ஊருல இருந்து வேலைக்கு ஆட்களை வரவச்சு நாளைக்கு அறுவடை செய்யலாம்னு சொன்னாரு

அத கேட்ட மைனா குஞ்சுகள் திரும்பவும் பயந்து போச்சுங்க ,அவுங்க அம்மா கிட்ட நாம வேற எங்கயாச்சும் போய்டலாமான்னு கேட்டுச்சுங்க

அதுக்கு அந்த அம்மா மைனா சொல்லுச்சு ஒன்னும் பயம் இல்லை நாளைக்கும் அறுவடை நடக்காதுனு சொல்லுச்சு

அதே மாதிரியே மறுநாளும் அறுவடை நடக்கல

கொஞ்ச நாளுக்கு அப்புறமா அங்க வந்த விவசாயி ரொம்ப காலம் தாழ்த்த கூடாது அதனால நாமளே அறுவடை செஞ்சிடலாம்னு சொன்னாரு

அத கேட்ட அம்மா மைனா சொல்லுச்சு ஆபத்து குழந்தைகளா யாரையும் நம்பலாம தன்னோட வேலைய தானே செய்ய அந்த விவசாயி முடிவெடுத்துட்டாரு

அதனால் எல்லாரும் மெதுவா என்னோட நடந்து வாங்கனு சொல்லி அந்த கூட்ட விட்டு பக்கத்துல இருக்குற புதருக்குள்ள பாதுகாப்பை எல்லா குஞ்சுகளையும் கூட்டிட்டு போய்டுச்சு அந்த மைனா

நீதி : தன் கையே தனக்குதவி

Exit mobile version