The King’s Favourite Servant – ராஜாவின் சந்தேகம் குழந்தைகள் கதை ;- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு அவருக்கு நிறைய மந்திரிங்க இருந்தாங்க
எல்லா மந்திரிகளும் ராஜா சொல்றத கேட்டு நல்லபடியா வாழ்ந்தாங்க
ஒரு நாள் ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு
எல்லாரும் தன்கிட்ட நடிக்கிறாங்களோ அப்படின்னு
உடனே ஒரு பரிட்சை வைக்க எண்ணுனாரு
ஒரு நாள் காட்டுக்கு எல்லா மந்திரிகளையும் கூட்டிகிட்டு போனாரு அந்த ராஜா
ராஜா சொன்னாரு இது மிக பெரிய காடா இருக்கு , நிறைய காட்டு விலங்குகள் இருக்கு எல்லோரும் பத்திரமா இருங்கன்னு சொன்னாரு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு வைரங்கள் நிறைஞ்ச பைய கீழ போட்டாரு அதுல இருந்த வைரங்கள் எல்லாம் கொட்டுச்சு
எத பாத்த ராஜா அடடா வைரம் கீழ விழுந்துடுச்சா பரவால்ல நீங்க எல்லோரும் வேணும்ங்கிறத எடுத்துக்கோங்கன்னு சொன்னாரு அந்த ராஜா
உடனே எல்லா மந்திரிகளும் வைரங்களை பிறக்க ஆரம்பிச்சாங்க
ஒரு மந்திரி மட்டும் ராஜா கூடவே நின்னரு , அவரை பாத்த ராஜா , ஏன் நீங்க வைரத்த பொறக்கல அப்படின்னு கேட்டாரு
இல்ல ராஜா வன விலங்குகள் எதாவது உங்கள தாக்கிட போகுது அதனாலதான் நான் உங்கள பாதுகாக்க இங்க நிக்குறேன்னு சொன்னாரு
அப்பத்தான் ராஜாவுக்கு தெரிஞ்சது யார் நல்ல மாதிரின்னு
உடனே அவரை முதல் மந்திரியா ஆக்கி அவர் கூடவே வச்சுக்கிட்டாரு