Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Instructor – Kids Story – குரு சிஷ்யன் – குழந்தைகள் கதை

The Instructor – Kids Story – குரு சிஷ்யன் – குழந்தைகள் கதை :- ஒரு ஊருல ஒரு குட்டி பையன் இருந்தான்

அவனுக்கு வாள் பயிற்சி செஞ்சு பெரிய போர் வீரனா ஆகணும்னு ஆச,அதனால ஒரு நல்ல குரு கிட்ட சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட நினைச்சான்

அப்பதான் பாக்கு ஊருல ஒரு வாள் பயிற்சி கொடுக்குற ஒரு குருவ பத்தி அவனுக்கு தெரிய வந்துச்சு

உடனே அவரை போய் பார்த்தான் அந்த குட்டி பையன் ,ஐயா எனக்கு வாள் பயிற்சி செஞ்சு மிக பெரிய போர் வீரனா ஆகணும் ,எனக்கு வாள் சுழற்ற கத்து கொடுங்கன்னு சொன்னான்

அந்த குருவும் அவனுக்கு வாள் பயிற்சி சொல்லி தர்றதா ஒத்துக்கிட்டாரு ,ஆனா தன்னோட அசிரமத்துல தங்கி தனக்கு பணிவிடைகள் செஞ்சா மட்டுமே வாள் பயிற்சி சொல்லி தருவேன்னு சொன்னாரு

உடனே அந்த குட்டி பையனும் தன்னோட அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு அந்த குருவோடு அசிரமத்துலயே போய் தங்கிட்டான்

அவன தினமும் துணி துவைக்கிறது , சமையல் செய்யுறது , பாத்திரம் கழுவுறதுனு வேலை வாங்கிக்கிட்டே இருந்தாரு அந்த குரு

அவன் எந்த வேலை செஞ்சாலும் அவனை திட்டி அடிக்க ஆரம்பிச்சாரு அந்த குரு ,எதிர்பாராத நேரத்துல குரு அடிக்கிற அடிய எல்லாம் வாங்குன அந்த பையனுக்கு ஒண்ணுமே புரியல ,ஏன் நம்மள இந்த குரு அடிக்கிறாருனு குழப்பமா இருந்துச்சு அவனுக்கு

இப்படியே கொஞ்ச மாதங்கள் ஆச்சு ,ஆனா அவனுக்கு வாள் சுழற்றத பத்தி எந்த பயிற்சியும் கொடுக்கவே இல்ல ,நாள் ஆக ஆக அந்த பையனுக்கு சந்தேகம் வந்துச்சு

குரு நமக்கு வாள் பயிற்சி கொடுக்காம எதுக்கு இப்படி வேலை வாங்குறாருனு நினைச்சான் ,உடனே குரு கிட்ட போயி ஏன் எனக்கு வாள் பயிற்சி கொடுக்காம வீட்டு வேலை மட்டும் செய்ய சொல்றீங்கனு கேட்டான்

அதுக்கு அந்த குரு சொன்னாரு வாள் சுழற்ற போதுமான உடல் தகுதி உடற்பயிற்சி செஞ்சா தான் வரும்னு இல்லை உங்க அம்மா மாதிரி வீட்டு வேலை செஞ்சாலும் வரும்னு சொன்னாரு

குரு சொன்னா அதுல எதாவது அர்த்தம் இருக்கும்னு தெரிஞ்சிகிட்ட அந்த பையன் தினமும் அவர் சொல்ற வேலைய செய்ய ஆரம்பிச்சான்

அந்த குட்டி பையன் தன்னோட வேளய மும்முரமா செய்யுறப்ப ஒரு மரத்துல செஞ்ச வாள எடுத்துட்டு அப்ப அப்ப அந்த பையன தாக்குவாரு குரு .

தொடர்ந்து வேலை செஞ்சு தன்னோட கை கால்கள் இலகுவானதுனால சுலபமா அந்த தாக்குதல தடுக்க ஆரம்பிச்சான் அந்த பையன்

தன்னோட கைகள் தாக்குதல சமாளிக்கிற அளவுக்கு பலம் வாய்ந்ததா மாறிக்கிட்டு வர்றத உணர்ந்தான் அந்த குட்டி பையன்

ஒருநாள் குரு தியானம் செஞ்சுகிட்டு இருக்குறத பார்த்தான் அந்த குட்டி பையன் ,அவரு பக்கத்துல அந்த மர வாளும் இருந்துச்சு

உடனே அந்த பையன் சத்தம் போடாம அந்த வாள எடுத்து குருவ நோக்கி வீசுனான்

வாள் தன்னை நோக்கி வீசப்படுத்த மெல்லிய கத்தோட சத்தத்துல கண்டு பிடிச்ச குரு லாவகமா குனிஞ்சு தப்பிச்சாரு

கண் விழிச்ச குரு சொன்னாரு ,வாள் பயிற்சியில் வாள சுழற்றது நீண்ட நாள் பயிற்சி எடுத்து சுலபமா காத்துக்கிடலாம் ,ஆனா அடுத்தவர் எந்த பக்கம் இருந்து எப்ப கத்தி வீசுவாருனு தெரியாத நேரத்துலயும் அனிச்சையா அத தடுக்கிறது எப்படினு நீ கத்து கடனும்

அதுக்குதான் வாள் பயிற்சி எடுக்குறதுக்கு முன்னாடியே உன்ன தாக்கி அந்த உத்திகளை உனக்கு சுலபமா கத்து கொடுத்தேன் ,ஒரு வேலை உனக்கு வாள் சுழற்ற வித்தை முழுசா தெரிஞ்சிடுச்சுனா ஒரு வாள் இந்த இந்த திசையிலதான் உன்ன வந்து அடையும்கிற எதிர்பார்ப்பு உனக்குள்ள உருவாகிடும்

ஆனா இப்ப உனக்கு வாள் சுழற்ற தெரியாது ,எப்படி வாள் உன்னவந்து அடையும்னு தெரியாது ,எந்த பக்கம் உன்ன வந்து வாள் வெட்டும்னு தெரியாது ,ஆனா இன்னொரு வேலைய மும்முரமா செஞ்சுக்கிட்டு இருக்கிறப்ப சின்ன அசைவு ,சின்ன சத்தம் கேட்டா கூடா உன்னால சித்தரிக்க முடியுது

இனி நீ வாழ் பயிற்சிய தொடங்கலாம்னு சொன்னாரு ,குரு தனக்கு பாதுகாப்பு உத்திகளை தான் இத்தனை நாள் சொல்லி கொடுத்திருக்காருனு புரிஞ்சிகிட்ட அந்த பையன் ரொம்ப சந்தோஷப்பட்டான்

தொடர்ந்து வாள் பயிற்சி செஞ்சு போர் வீரனா மாறினான் அந்த குட்டி பையன்

Download This Story in PDF – CLICK HERE

Exit mobile version