Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Indigo Jackal Moral Story in Tamil – மை பூசிய குள்ளநரி

The Indigo Jackal Moral Story in Tamil – மை பூசிய குள்ளநரி :- ஒரு காட்டுல ஒரு குள்ளநரி கூட்டம் இருந்துச்சு,அந்த குள்ளநரி எல்லாம் ஒன்னா சேந்து உணவு தேடி சாப்புடும்

அதுல ஒரு குள்ள நரிக்கு வசாயிடுச்சு அதனால ஓடி ஆடி வேட்டையாட முடியல அதனால அதுக்கு மத்த குள்ளநரி எல்லாம் கொஞ்சமா தான் சாப்பாடு கொடுத்துச்சுக்கு

தன்னோட மரியாதை கொறஞ்சுட்டே வர்ரத பாத்து ரொம்ப கவல பட்டு தனியா உணவு தேட ஆரம்பிச்சுச்சு

ஒரு நாள் பக்கத்துக்கு கிராமத்துல உணவு தேட போன குள்ளநரி தவறி சாய தொட்டில விழுந்துடுச்சு

கருப்பு சாயம் அதோட உடம்பு எல்லாம் ஒட்டிக்கிச்சு

அப்படியே காட்டுக்கு வந்த குள்ளநரிய பாத்த எல்லா விலங்குகளும் பயந்து ஓட ஆரம்பிச்சதுங்க

தண்ணி குடிக்க போன அந்த குள்ளநரி தண்ணில தன்னோட உருவத்த பாத்துச்சு

அந்த கருப்பு கலர் தன் மேல ஓட்டிகிடுச்சு அதனாலதான் எல்லாரும் பயப்படுறாங்கன்னு உண்மைய அந்த குள்ளநரி தெரிஞ்சுக்கிச்சு

உடனே எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு நான் உங்கள விட பெரிய மிருகம் அதனால எனக்கு உணவு படச்சுட்டுதான் எல்லாரும் சாப்பிடணும்னு சொல்லுச்சு

அந்த குள்ளநரிய பாத்துட்டு பயந்த எல்லா மிருகமும் சாப்பிட கொண்டு வந்து கொட்டுச்சுங்க

ஒருநாள் திடீர்னு மழை பெஞ்சது உடனே அந்த கலர் எல்லாம் கரைஞ்சு போச்சு

எல்லா மிருகமும் உண்மை தெரிஞ்சு அந்த குள்ளநரிய அடிச்சு விரட்டிடுச்சுங்க

Exit mobile version