The Idea of the Khojas – அக்பர் பீர்பால் கோஜா மக்கள்-Akbar Birbal Story:-ஒருமுறை அக்பர் கோஜா மக்கள் மேல கோபம் வந்துச்சு ,இன்னைல இருந்து பதினஞ்சு நாள்ல எல்லா கோஜா மக்களும் இந்த நாட்ட விட்டு போகணும்னு உத்தரவு கொடுத்தாரு
இதனால எல்லா கோஜா மக்களும் ரொம்ப கவலை பட்டாங்க , இருந்தாலும் அவுங்களுக்கு நாட்ட விட்டு போக விருப்பம் இல்ல
அதனால் மறைஞ்சு வாழ்ந்துகிட்டு இருந்தாங்க ,ஒருநாள் பீர்பால ரகசியமா சந்திச்சி உதவி கேட்டாங்க
உடனே பீர்பாலும் அவுங்களுக்கு ஒரு யோசனை சொன்னாங்க
ஒருநாள் அக்பர் நகர் வளம் வந்தாரு ,அப்ப அங்க இருந்த மரத்து மேல எல்லாம் ஏறி உக்காந்து இருந்தாங்க
அவுங்க பார்த்த அக்பர் கேட்டாரு இன்னும் நீங்க இந்த நாட்ட விட்டு போகலையானு கேட்டாங்க
அதுக்கு ஒருத்தர் சொன்னாரு ,அரசே நாங்க எங்க போனாலும் அது அக்பரின் ஆட்சிக்கு உள்ளான நாடவே இருக்கு ,இல்ல என்னைக்கு நாளும் அக்பர் வசம் வரக்கூடிய நாடவே இருக்கு
அதனால நாங்க வானத்துல ஏற முயற்சி பன்னிகிட்டு இருக்கோம்னு சொன்னாங்க
இத கேட்ட அக்பருக்கு ஒருபக்கம் பெருமையாவும் ,ஒருபக்கம் நகைசுவையாவும் இருந்துச்சு
அக்பருக்கு தெளிவா தெரிஞ்சது இது பீர்பாலோட வேலதானு ,உடனே அவரோட உத்தரவ வாபஸ் வாங்கிட்டாரு
கோஜா மக்கள் பீர்பால ரொம்ப புகழ்ந்தாங்க