THE HUNTER, THE STAG, AND THE HORSE – TAMIL MORAL STORY- கலைமானும் குதிரையும் சிறுவர் கதைகள் :- ஒரு காட்டுல ஒரு குதிரையும் கலைமானும் ஒரு நாள் சண்ட போட்டுச்சுங்க
அதனால கோபமான அந்த காட்டு குதிரை அந்த காட்டுக்குள்ள இருக்குற வேட்டைக்காரன் கிட்ட போச்சு
எனக்கு ஒரு கலைமான் இருக்குற இடம் தெரியும் அந்த இடத்துக்கு நான் உங்கள கூட்டிட்டு போறேன் அந்த மான நீங்க வேண்ட்டையாடணும்னு சொல்லுச்சு அந்த குதிரை
குதிரையோட பேச்ச கேட்ட அந்த வேட்டைக்காரன், எனக்கு சம்மதம் ஆனா எனக்கு காட்டுக்குள்ள நடக்க முடியாது , உன் முதுகுல சவாரி செய்ய இந்த கடிவாளத்தை உன்மேல போட்டுக்குறேன்னு சொன்னான் அந்த வேட்டைக்காரன்
எப்படியாவது அந்த காலமான பிடிக்கணும்னு நினச்சா அந்த குதிரை அதுக்கு ஒத்துகிடுச்சு
உடனே தன்னோட கடிவாளத்தை எடுத்து அந்த குதிரை மேல போட்டு ,அதுமேல உக்காந்து காட்டுக்குள்ள போனான் அந்த வேட்டைக்காரன்
அந்த குதிரை சொன்ன இடத்துல இருந்த மான வலை வீசி பிடிச்சான் அந்த வேட்டைக்காரன் ,உடனே என்ன விடுதலை பண்ணுங்க என்னோட கடிவாளத்தை கழட்டுங்கனு சொல்லுச்சு அந்த குதிரை
ஆனா அதுக்கு அந்த வேட்டைக்காரன் , எனக்கு உதவி செஞ்சாலும் ஒரு மானுக்கு நீ துரோகம் செஞ்சிருக்க அதுக்கு தண்டனையா எனக்கு எப்பவும் சவாரி செய்ய நீ என்னோட அடிமையாவே இருன்னு சொன்னான் அந்த வேட்டைக்காரன்
அப்பதான் அந்த குதிரைக்கு ஒரு திருக்குறள் ஞாபகத்துக்கு வந்துச்சு
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?
அப்படிங்கிற விளக்கம் அந்த குதிரைக்கு நல்லா புரிச்சிச்சு