Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Hare & His Ears – முயலின் காது

The Hare & His Ears – முயலின் காது :- ஒரு காட்டு பகுதியில ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த சிங்கம் ஒருநாள் ஒரு மானை வேட்டையாடி கொன்னுச்சு ,

வேட்டையாடுன மானை திங்கும்போது அந்த மானோட கொம்பு சிங்கத்தோட வாயில குத்திடுச்சு

அதனால சிங்கத்துக்கு ரொம்ப கோபம் வந்திடுச்சு ,இனிமே என்னோட காட்டுல கொம்பு வச்ச எந்த மிருகமும் வாழ கூடாது எல்லாரும் வேற காட்டுக்கு போய்டுங்கனு அறிவிச்சுச்சு

இத கேட்ட மான் ,ஆடுனு எல்லா கொம்பு வச்ச மிருகங்களும் அந்த காட்ட விட்டு வேற காட்டுக்கு போயிடுச்சுங்க

அங்க வாழ்ந்துகிட்டு இருந்த ஒரு முயல் ஒருநாள் சாயந்தரம் நடந்து போய்கிட்டு இருந்துச்சு

அப்ப வெயில் பட்டு அதோட நிழல் முயலுக்கு முன்னாடி விழுந்துச்சு ,அப்ப பார்த்தா முயலோட காது கொம்பு மாதிரியே தெரிஞ்சது

உடனே பயந்துபோன முயலும் அந்த காட்ட விட்டு ஓடி போச்சு

அந்த புது காட்டுல இருந்த மான்கிட்ட போய் நடந்ததை சொல்லுச்சு முயல்

அதுக்கு அந்த மான் சொல்லுச்சு அடப்பாவி அந்த காட்டுல இருந்தாலாவது உனக்கு கொம்பு இருக்குனு நினைச்சுட்டு அந்த சிங்கம் உன்ன கொள்ளாம விட்டிருக்கலாம் ,ஆனா இந்த காட்டுல இருக்குற சிங்கம் உனக்கு கொம்பு இருந்தாலும் இல்லாட்டினாலும் ஒருநாள் உன்ன வேட்டையாடியே தீரும்னு சொல்லுச்சு

இத கேட்ட முயலுக்கு இப்ப ரொம்ப பயம் வந்துடுச்சு ,நான் வேணும்னா அந்த காட்டுக்கே திரும்பி போய்டுவானு கேட்டுச்சு முயல்

அப்பத்தான் அந்த மான் சொல்லுச்சு உன்ன மாதிரி பயந்தவங்களுக்கு எங்க போனாலும் நிம்மதி கிடைக்காது அதனால இங்கயே இருன்னு சொல்லுச்சு

நீதி : அச்சம் உடையவருக்கு எங்கு சென்றாலும் நிம்மதி கிடையாது

Exit mobile version