The God Of The Jungle – மாம்பழ திருடன் – Akbar Birbal Tamil Story:-பீர்பாலுக்கும் அக்பருக்கு ரொம்ப நல்ல சிநேகிதம் இருந்தாலும் ,அக்பர் பீர்பால கிண்டல் பண்றது ,சீண்டுறதுனு செஞ்சுக்கிட்டே இருப்பாரு
ஒருநாள் பீர்பால கிண்டல் செய்யணும்னு ஒரு யோசனை செஞ்சாரு ,அரண்மனை ஆசாரிய வரவச்சு ஒரு பொறி செஞ்சாரு ,அந்த பொறிய ஒருமாம்பழத்த இனச்சாரு
அந்த மாம்பழத்த தொட்டா அந்த பொறி கவ்வி பிடிச்சிக்கிற மாதிரி வடிவமைச்சு இருந்தாங்க
கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அங்க வந்த பீர்பால் அரசருக்காக காத்துகிட்டு இருந்தாரு ,அப்பத்தான் தன்னோட இருக்கைக்கு பக்கத்துல புதுசா மாம்பழம் வச்சிருக்குறத பாத்தாரு ,அது புதுசா பல பலனு இருக்குறத பார்த்த பீர்பால் அத தொட்டாரு
உடனே அந்த பொறி அவர் கைய பிடிச்சிகிடுச்சு ,இத ஒளிஞ்சிருந்து பார்த்துகிட்டு இருந்த அந்த ஆசாரியும் ,அக்பரும் அங்க வந்தாங்க
என்ன பீர்பால் அரசருக்குனு வச்சிருந்த மாம்பழத்தை நீங்கதான் தினமும் திருடு திங்குறீங்களானு கேட்டாரு
இத கேட்ட பீர்பாலுக்கு சங்கடமா போச்சு ,அரசே இது எதேச்சையா நடந்ததுனு சொன்னாரு ,உடனே அரசர் வரவா இல்லைனு சொல்லி ஆசாரிய விட்டு அந்த பொறிய கழட்ட சொன்னாரு
அன்னைல இருந்து அரசர் பீர்பால கிண்டல் செய்யுறதுக்கு என்ன பீர்பால் புது மாம்பழம் எப்படி இருக்குனு கேப்பாரு ,இத தொடர்ந்து அவர் கேட்டதால பீர்பாலுக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு
எப்படிடா இந்த தொல்லைல இருந்து தப்பிக்கிறதுனு யோசிச்சிகிட்டே இருந்தாரு
ஒருநாள் அக்பர் காட்டுக்கு வேட்டைக்கு போனாரு ,அப்ப பீர்பால் வரலைன்னு சொல்லிட்டாரு
ரொம்ப தூரம் போன அக்பர் ஒரு சமயம் தனிமையா இருந்தாரு ,அப்ப ஒரு காட்டுவாசி அங்க வந்தான்
நான் தான் இந்த காட்டுக்கு சொந்தக்காரன் ,எனக்கு தெரியாம நீங்க எப்படி வேட்டையாடலாம்னு கேட்டான்
இதே கேட்ட அக்பர் சொன்னாரு ,காட்டுவாசியே இது என் எல்லைக்கு உட்பட்ட காடு இங்க வேட்டையாட எனக்கு உரிமை இருக்குனு சொன்னாரு
இது எதையும் காதுல வாங்கிகிடாத அந்த காட்டுவாசி ,இது என்னோட இடம்னு சொல்லிகிட்டே இருந்தான் ,
அவனோட தொல்லைல இருந்து தப்பிக்க நினைச்சாரு அக்பர் ,உடனே அக்பர் சொன்னாரு நான் என்ன செஞ்சா என்ன இங்க இருந்து போக விடுவேன்னு கேட்டாரு
அதுக்கு அந்த காட்டுவாசி சொன்னான் “காட்டு அரசருக்கு வணக்கம்னு” சொல்லிகிட்டே 10 முக்கி போட சொன்னான்
எப்படியாவது இவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு நினச்ச அக்பரும் அதே மாதிரி செஞ்சாரு
அதுக்கு அப்புறமா அரண்மனைக்கு திரும்புனாரு அக்பர் ,அங்க காத்துகிட்டு இருந்த பீர்பால பார்த்ததும் என்ன பீர்பால் அவர்களே புது மாம்பழம் என்ன சொல்லுதுனு கேட்டாரு ,அதுக்கு பீர்பால் சொன்னாரு “காட்டு அரசருக்கு வணக்கம்னு” சொல்லுதுனு சொன்னாரு
அப்பத்தான் புரிஞ்சது அக்பருக்கு ,காட்டு வாசியா வேஷம் போட்டுக்கிட்டு வந்தது பீர்பால் தான்னு