The Gluttonous Monkey – சுயநலம் பிடித்த குரங்கு :- ஒரு காட்டுல ஒரு குரங்கு வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த குரங்கு ரொம்ப சுயநலம் பிடிச்சதா இருந்துச்சு,கிடைக்குற எல்லா உணவுகளையும் அதுவே சாப்பிட்டுடும் அந்த குரங்கு
அது போக மத்த மிருகங்கள் சேமிச்சு வச்சிருக்கிற உணவ கூட திருடி தின்னுடும் அந்த குரங்கு
பக்கத்துல இருக்குற ஒரு முயலோட உணவு எடுத்து தின்னுடுச்சு அந்த குரங்கு , ஏன் இப்படி செஞ்சன்னு கேட்ட முயல் மேல வாழைப்பழ தோழ வீசி அடிச்சுச்சு அந்த குரங்கு
அதே மாதிரி நரி யோட குகைக்கு போன குரங்கு அங்க இருக்குற உணவையும் எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சு
இப்படி எல்லாரோட உணவையும் எடுத்து திங்கிற குரங்கு ஒருநாள் காட்டுக்கு நடுவுல இருக்குற ஒரு தங்க ஆப்பிள் மரத்தை பார்த்துச்சு
உடனே எல்லா ஆப்பிள் பழங்களையும் திங்க பிடுங்க ஆரம்பிச்சுச்சு அந்த குரங்கு
அப்ப அங்க இருந்த ஒரு ஆந்த அந்த குரங்க பார்த்து சொல்லுச்சு ,இது மந்திர ஆப்பிள் அடுத்தவங்களுக்கு கொடுக்குற நல்லவங்க தான் இத சாப்பிட முடியும்னு சொல்லுச்சு
அத கேட்ட குரங்கு அடுத்தவங்க சாப்பிட்டா என்ன சாப்பிடலனா என்ன நான் சாப்பிட்டா எனக்கு போதும்னு சொல்லிட்டு ஒரு ஆப்பிள பிடுங்கி சாப்பிட்டுச்சு குரங்கு
உடனே குரங்குக்கு வயித்த வழி வந்துடுச்சு ,ஐயோ எனக்கு ரொம்ப வயிறு வலிக்குதே இப்ப நான் என்ன செய்யனு கேட்டுக்கு ஆந்தைகிட்ட
அத பார்த்து சிரிச்ச ஆந்தை சொல்லுச்சு ,உனக்கு கிடைக்குற உணவ அடுத்தவங்க கூட பங்குபோட்டு சாப்பிடு அப்பதான் உன்னோட வயிறுவலி போகும்னு சொல்லுச்சு
மனசு வருத்தப்பட்ட அந்த குரங்கு அன்னைல இருந்து அதுக்கு கிடைச்ச உணவு பழங்கள் எல்லாத்தையும் எல்லார் கூடையும் பகிர்ந்து சாப்பிட ஆரம்பிச்சுச்சு
சுயநலம் பிடிச்ச குரங்கு இப்படி நல்ல குரங்கா மாறுனத எல்லா மிருகங்களும் ஆச்சர்யமா பார்த்துச்சுங்க
அதுக்கு அப்புறமா அந்த குரங்குகூட நட்பா பழக ஆரம்பிச்சுதுங்க ,அதுங்களுக்கு கிடைச்ச உணவ கூட குரங்குக்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிச்சுதுங்க அந்த நல்ல மிருகங்கள்
ஒருநாள் திரும்பவும் அந்த தங்க ஆப்பிள் மரத்துக்கு போன குரங்கு ஒரு ஆப்பிள பிடிங்கி சாப்பிட்டுச்சு ,ஆனா இப்ப அதுக்கு வயித்து வழி வரல அதுக்கு பதிலா அந்த குரங்குக்கு ஒரு மிக பெரிய மன திருப்தி கிடைச்சுச்சு