The Furious Princess Fiona- கோபக்கார இளவரசி பியோனா :- ஒரு காலத்துல ஒரு மிக பெரிய ராஜாங்கம் இருந்துச்சு
அந்த ராஜாங்கத்த ஆட்சி செஞ்ச அரசருக்கு ஒரு இளவரசி இருந்தா ,அவ எப்பவும் சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் கோப படுவா ,அதனால அவ முகம் எப்பவும் சிடு சிடுன்னு இருக்கும்
ஒருநாள் வேலைக்கார பெண் கிட்ட தன்னோட செருப்ப எடுத்துட்டு வர சொன்னா ,உடனே அந்த வேலைக்கார பெண்ணும் செருப்பை எடுத்துட்டு வந்தா
அந்த செருப்ப பார்த்த பியோனா இது ரொம்ப பலசா இருக்குனு கோபப்பட்டா , உடனே புது செருப்ப எடுத்துட்டு வர சொல்லி சொன்னா
அதுக்கு அந்த வேலைக்கார பெண் சொன்னா இளவரசி புது செருப்பை அடுத்த வாரம் வர்ற உங்க பிறந்த நாளுக்கு பொட்டுக்கலாமேன்னு கேட்டா
இத கேட்டு ரொம்ப கோபமான பியோனா வெறும் காலோட தோட்டத்துக்கு போனா ,இளவரசி கோபத்த பார்த்த வேலைக்காரிக்கு ரொம்ப வருத்தமா போச்சு
தோட்டத்துக்கு வந்த இளவரசி கால்ல ஒரு முள் குத்திடுச்சு ,ரொம்ப கோபமான இளவரசி ரொம்ப சத்தம் போட்டு கத்துனா
உடனே அங்க இருந்த மிருகங்களும் பறவைகளும் அங்க இருந்து ஓடி போயிடுச்சுங்க
அப்பத்தான் இளவரசி ஒரு பூவ பார்த்தா, அந்த பூ தன்ன விட அழகா இருக்குறத பார்த்து ரொம்ப கோபம் வந்துச்சு இளவரசிக்கு
உடனே அந்த பூவ பிச்சி போட போனா பியோனா ,உடனே அந்த பூ சொல்லுச்சு என்ன பிச்சிடாதீங்க இளவரசி உங்களுக்கு இறக்க குணமும் நல்ல எண்ணமும் இருந்தா என்னைவிட அழகா மாறிடுவீங்கன்னு சொல்லுச்சு
இத கேட்ட இளவரசிக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு ,இத பார்த்த பூ சொல்லுச்சு ,இளவரசி அவர்களே என்னால உங்கள இந்த உலகத்துலயே சிறந்த அழகியா மாத்த முடியும்னு சொல்லுச்சு
உடனே இளவரசி ஒரு நிமிஷம் நின்னு அந்த பூ என்ன சொல்லுதுனு கேட்டா ,அப்பத்தான் அந்த பூ ஒரு போட்டி வச்சுச்சு ,
இளவரசி பியோனா அவர்களே இன்னைல இருந்து உங்க கோபத்தை குறைச்சிகிட்டு ,சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் எறிஞ்சி விழறத விட்டுட்டு ,சிரிச்ச முகத்தோட ஒரு வாரம் இருங்க பார்க்கலாம்னு சொல்லுச்சு
உடனே இளவரசி அது மாதிரி இருக்க முயற்சி பண்ணுனா , அரண்மனைக்கு வந்த இளவரசிகிட்ட சாப்பிட வரச்சொல்லி வேலைக்கார பெண் சொன்னா
உடனே சிரிச்சிய முகத்தோட வர்றேன்னு சொன்னா ,எப்பவும் சிடு சிடுன்னு இருக்குற இளவரசி சிரிச்ச முகத்தோட வர்றேன்னு சொன்னதும் ,அந்த வேலைக்கார பெண்ணோட முகமும் பிரகாசமா மாறுச்சு
இத பார்த்த இளவரசிக்கு இன்னும் சந்தோசம் ஆகிடுச்சு ,தான் செஞ்ச சின்ன செயலால இந்த வேலைக்கார பெண் எவ்வளவு சந்தோசமா மாறிட்டா இனிமே இந்த குணத்தை தொடர்ந்து கடை பிடிக்கணும்னு நினச்சா
சாப்பிட்டு மேஜைக்கு வந்த இளவரசி கிட்ட உனக்கு பிடிச்ச உணவு எதுவும் இன்னைக்கு செய்யல அதுக்கு பதிலா ஆரோக்கியமான உணவு இருக்குனு சொன்னாங்க அரசி
இத கேட்டு இளவரசி கோபப்பட போறான்னு நினைச்சாரு அரசர் ,ஆனா பியோனா கோபபடாம அதனால என்ன அம்மா இன்னைக்கு ஒருநாள் உங்கள் சொல்ப்படி ஆரோக்கியமான உணவு சாப்பிட்டுக்கிடறேனு சொன்னா
இத கேட்ட அரசருக்கும் அரசிக்கும் ரொம்ப சந்தோசமா ஆகிடுச்சு ,அன்னைக்கு அரசரும் அரசியும் இளவரசிகிட்ட நிறய பாசத்தை காமிச்சங்க, இளவரசியோட நிறய பேசுனாங்க
தன்னோட சின்ன நல்ல செயல் காரணமா இன்னைக்கு தன்னோட குடும்பம் எவ்வளவு சந்தோசமா இருக்குனு புரிஞ்சிகிட்ட இளவரசி தொடர்ந்து நல்ல குணங்களை காட்ட ஆரம்பிச்சா
தோட்டத்துல இருக்குற விலங்குகள் பறவைகள் கிட்ட கூட பாசத்தை காட்ட ஆரம்பிச்சா இளவரசி
இளவரசியோட உள் அழகு கூட கூட வெளி அழகும் கூடிகிட்டே வந்துச்சு ,ஒருநாள் ஒரு அணில் கேட்டுச்சு இளவரசியை உங்க அழகு கூடிகிட்டே போகுதே என்ன காரணம்னு கேட்டுச்சு
ஆனா இளவரசி புகழுக்கு மயங்காதவளா சிரிச்சிகிட்டே போய்ட்டா ,அப்ப அங்க இருந்த மரம் சொல்லுச்சு ,அணிலே அந்த இளவரசி தன்னோட உள்ளத்தை தூய்மை படுத்திகிட்டு வாழ ஆரம்பிச்சலோ அப்பவே அவளோட அக அழகு கூட ஆரம்பிச்சிடுச்சு ,
இந்த உலகத்துல அழகு கம்மியா இருக்குறவங்க கூட அமைதியான இறக்க குணத்தோட இருக்கிறப்ப நிறய பேர் அவுங்ககூட பழக விருப்ப பாடுவாங்க ,அப்படி பழகுறப்ப அவுங்களோட அழகு அவுங்களுக்கு ஒரு பொருட்டாவே இருக்காது இந்த உலகத்துலயே அவுங்கதான் அழகுன்னு தோன ஆரம்பிச்சிடும்
இந்த இளவரசியோட முகமோ தோற்றமோ எதுவும் மாறலை , இத்தனை நாள் சிடு சிடுன்னு இருந்த அவளை நீங்க எல்லாரும் வெறுத்தீங்க ,அவ முகத்த கூட பார்க்க நீங்க விருப்ப படல ,ஆனா அவளோட குணம் மாறுனதுக்கு அப்புறமா எல்லாரும் அவகூட சகஜமா பழகுறீங்க அதனால அவளோட அழகை பத்தி உங்களுக்கு கவலை இல்லாம போச்சு ,தொடர்ந்து அவளோட குணத்துக்காக நீங்க அவள விரும்ப ஆரம்பிச்சதும் இந்த உலகத்துலயே அழகி அவதான்னு உங்க மனசு நினைக்க ஆரம்பிச்சிடுச்சு சொல்லிச்சு மரம்
இத கேட்ட இளவரசி அந்த பூக்கிட்ட போய் நன்றி சொன்னா
அழகிய பூவே போட்டினு சொல்லி என்ன நல்ல பழக்கங்கள் பின்பற்ற வச்சதுக்கு நன்றின்னு சொன்னா
அப்பத்தான் அந்த பூ சொல்லுச்சு இளவரசி அவர்களே உங்க அழகுக்கு அழகு சேர்க்கிற மாதிரி உங்க தலைக்கு மேல தேவதைகளுக்கு இருக்குற தங்க வட்டம் எப்போதும் இருக்கும் இதுதான் நான் உங்களுக்கு தர்ற பரிசுனு சொல்லுச்சு
உடனே இளவரசியோட தலைக்கு மேல தங்க வட்டம் தெரிய ஆரம்பிச்சுச்சு
இந்த கதையை கேட்ட குழந்தைகள் எல்லாம் இறக்க குணத்தோட வாழ்ந்தா மட்டும் போதாது , தங்களோட புற அழகை நினச்சு எப்பவும் வறுத்த படாம உள் அழகை மெருகேத்துற செயல்ல ஈடு படனும்