The Fox & the Leopard – சிறுத்தையும் நரியும்:ஒரு காட்டு பகுதியில ஒரு சிறுத்தையும் நரியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க
அதுங்க ஒன்னாவே வேட்டையாடி ஒன்னாவே சாப்பிட்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க
ஒருநாள் சிறுத்தை சொல்லுச்சு இங்க பாரு இந்த காட்டுல இருக்குற மிருகங்களை விட என்னோட தொல்ல இருக்குற புள்ளிகள் எவ்வளவு அழகா இருக்குனு சொல்லுச்சு
உடனே அந்த நரியும் ஆமாம் சிறுத்தையாரே உங்களோட தோல் ரொம்ப அழகா இருக்குனு சொல்லுச்சு
அப்ப நரியோட அழகா வால பார்த்த சிறுத்தை சொல்லுச்சு உங்களுக்கு கூடத்தான் அழகான வால் இருக்கு அதப்பத்தி நீங்க ஏன் எப்பவும் பேச மட்டறீங்கனு கேட்டுச்சு
அதுக்கு நரி சொல்லுச்சு , என்னோட வால் அழக விட என்னோட புத்தி சாதூர்யம் ரொம்ப பெருசு அதனால தான் வேட்டை மிருகமான உங்ககூடவே என்னால நட்பா இருக்க முடியுதுனு சொல்லுச்சு
அதுக்கு சிறுத்தை சொல்லுச்சு அழகுக்கும் புத்திசாலி தனத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டுச்சு
அதுக்கு அந்த நரி சொல்லுச்சு என்னோட அழகு உங்கள விட அதிகமாவே இருந்தாலும் அத தம்பட்டம் அடிச்சிக்க முடியாது அப்படி என்னோட அழக உங்களோட ஒப்பிட்டு பேசுனா அது உங்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும் ,நீங்க என்ன அடிச்சி கொன்னுடுவீங்க ,அதனால என்னோட புத்தி சொல்படி என்னோட அழகை தாழ்த்தி பேசுறேன்
அப்படி பேசுறதால தான் மிக பெரிய வேட்டை மிடுகமான உங்க கூட என்னால நட்போட வாழ முடியுதுனு சொல்லுச்சு நரி
நீதி :- தன் பலம் அறிந்தவருக்கு தோல்விகள் இல்லை