The Flies & the Honey – ஈக்களும் தேனும் – ஒரு வீட்டுல ஒரு பெரிய தேன் பாட்டில் இருந்துச்சு

அதுல இருந்து கொஞ்சம் தேன் கீழ சிந்திடுச்சு
பக்கத்துல இருந்த ஈக்கள் எல்லாம் அதுல போயி மொச்சிச்சுங்க
தேன் மேல உக்காந்ததும் அதுங்களோட றெக்க எல்லாம் ஒட்டிகிடுச்சு
அதுங்களால தேன்ல இருந்து விடுபட முடியல

எவ்வளவு முயற்சி செஞ்சும் தேன்ல இருந்து வெளியவரமுடியாத ஈக்கள் அதுலயே கிடந்தது செத்துப்போச்சுங்க
இனிப்பான தேனிற்கு ஆசைப்பட்ட ஈக்கள் வீனா செத்துப்போச்சுங்க
நீதி : சிற்றின்பத்தில் கவனம் வைக்க கூடாது