The Farmer & the Stork – கொக்கும் விவசாயியும் : ஒரு பெரிய ஏரிக்கு பக்கத்துல ஒரு பெரிய விவசாய நிலம் இருந்துச்சு
அந்த நிலத்துல ஒரு விவசாயில் நெல் பயிர் செஞ்சு இருந்தாரு
அந்த ஏரிக்கு வர்ற கொக்கு எல்லாம் அந்த விவசாயியோட நெல்ல தின்னு அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துச்சு
அதனால ஒரு பெரிய வலை விரிச்சி கொக்கு எல்லாத்தையும் பிடிக்க முடிவு பண்ணுனாரு அந்த விவசாயி
மறுநாள் வந்து பாக்குறப்ப அந்த வலைல நிறைய கொக்கு மாட்டிகிட்டு இருந்துச்சு
பக்கத்துல போன விவசாயிகிட்ட ஒரு கொக்கு சொல்லுச்சு ,நான் இங்க உங்க நெல்லை திங்க வரல
நான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன் என்ன விட்டுடுங்கனு கேட்டுச்சு
அதுக்கு அந்த விவசாயி சொன்னாரு ,நீ வேணும்னா நல்லவனா இருக்கலாம் ,ஆனா நீ பிடி பட்டது திருடர்கள் கூட
உன்ன தவிர எல்லா கொக்குகளும் என்னோட பயிரை திங்க வந்ததுதான் ,அதுங்களோட கூட்டு சேர்ந்ததும் உனக்கு கண்டிப்பா தண்டனை உண்டுன்னு சொன்னாரு
நீதி : கூடா நட்பு கேடாய் முடியும்
நீதி : உங்கள் நண்பனை வைத்தே நீங்கள் மதிப்பிட படுகிறீர்கள்