Site icon தமிழ் குழந்தை கதைகள்

முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil

The-Emperors-New-Clothes-Story-in-Tamil

முட்டாள் அரசன் – The Emperors New Clothes Story in Tamil:- ஒரு ஊருல ஒரு அரசர் இருந்தாரு,எப்பவும் புகழ்ச்சி மேல அக்கறையா இருந்த அவரு ,யார் தன்னை புகழ்ந்தாலும் அப்படியே நம்பிடுவாரு.

அதனால அவரோட மந்திரிங்க எல்லாரும் எப்பவும் அவர புகழ்ந்துகிட்டே இருப்பாங்க, நாட்டுல எல்லாரும் சந்தோசமா இருக்காங்க அதுக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி அவர நம்ப வச்சுட்டு இருந்தாங்க அந்த மந்திரிமார்கள்

அங்க ஒரு வயசான மந்திரியும் இருந்தாரு ,அவருக்கு இந்த விஷயம் கொஞ்சம் கூட பிடிக்கல ,அவர் அரசர்கிட்ட வந்து நீங்க யார் என்ன சொன்னாலும் நம்பிடுறீங்க நாட்டுல எல்லாரும் கஷ்டப்படுறாங்க அத கொஞ்சம் கவனிங்கன்னு சொன்னாரு

உடனே போன அந்த ராஜா அவர வேலைய விட்டு அனுப்பிச்சுட்டாரு,சோகமான அந்த மந்திரி வீட்டுக்கு வந்தாரு ,அங்க அவரோட மகன் இருந்தான் ,

அப்பா ஏன் சோகமா இருக்கீங்கன்னு கேட்டான் ,அதுக்கு அந்த மந்திரி சொன்னாரு ,புகழுக்கு ஆசைப்படுற அரசுக்கு எப்படி புத்தி சொல்றதுன்னு தெரில ,நான் புத்தி சொல்ல போய் என்னையே வேலைய விட்டு அனுப்பிச்சிட்டாருன்னு சொன்னாரு ,

புத்திசாலியான அந்த மகன் சொன்னான். நான் போய் அந்த அரசருக்கும் பொய் சொல்லிட்டு தெரியுற மந்திரிகளுக்கு பாடம் புகட்டுறேன்னு சொல்லிட்டு அரண்மனைக்கு போனான்

அரசே நான் ஒரு வியாபாரி நான் நீண்ட தூரம் கடல் பயணம் செஞ்சு போனப்ப இந்த அதிசய சட்டையை கேள்விப்பட்டு உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்னு சொன்னான்.உடனே அரசர் எங்க அந்த சட்டைய காட்டுன்னு சொன்னாரு ,உடனே அந்த பையன் வெறும் கைய சட்ட மாதிரி காமிச்சான்.இது வீண் புகழ்ச்சி செய்றவங்களுக்கும் பொய் சொல்றவங்களுக்கும் கண்ணுக்கு தெரியாதுன்னு சொன்னான்

இத பாத்த மந்திரிகளுக்கு பகீர்னு இருந்துச்சு ,இந்த சட்ட கண்ணுக்கு தெரிலன்னு சொன்னா நாம கெட்டவங்கன்னு அரசருக்கு தெரிஞ்சுடும்னு பொய் சொல்ல ஆரம்பிச்சாங்க.

அரசே இன்னைக்கு உங்களோட பிறந்தநாள் அதனால இந்த சட்டைய போடுங்கன்னு அந்த பையன் சொன்னான் ,உடனே சட்டையை கழட்டிட்டு நின்னரு ,அவருக்கு சட்ட போட்டு விடுறமாதிரி சைகை செஞ்சான் அந்த பையன்

சட்ட இல்லாம நின்ன அரசர பாத்த மந்திரிகளுக்கு என்ன சொல்றதுன்னு தெரில ,உண்மையாவும் சொல்ல முடியல,அதனால அரசே இது ரொம்ப நல்ல சட்டை உங்களுக்கு பொருத்தமா இருக்குன்னு சொன்னாங்க.

ரொம்ப சந்தோசப்பட்ட அந்த ராஜா அப்படியே அரண்மனைய விட்டு வெளிய வந்தாரு ,

அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த எல்லாரும் வாசல்ல ராஜாவ பாத்து திகைச்சு போய்ட்டாங்க

ஒருத்தருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல ,அரசருக்கு பின்னாடியே மந்திரிகளும் நடந்து போனாங்க ,

அப்ப ஒரு குட்டி பையன் சொன்னான் ,என்ன இது அரசர் சட்ட இல்லாம வெளிய போறாருன்னு சொல்லி சிரிச்சான் .அத கேட்ட எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க.ராஜாவுக்கு ஒரே வெக்கமா போச்சு

அப்ப அந்த கூட்டத்துக்கு வந்த அந்த வயசான மந்திரி சொன்னரு ,எல்லாரும் சிரிக்குறத நிறுத்துங்க ,நான் தான் நீங்க எல்லாரும் சாப்பாடு துணிமணி இல்லாம கஷ்டப்படுறீங்கன்னு சொன்னேன் அதனால ரொம்ப வருத்தப்பட்ட ராஜா இனிமே வெளிய போகும்போது சட்ட போடாம தான் போவேன் ,

என்னைக்கு என்னோட நாட்டு மக்கள் நல்ல சாப்பாடோட ,நல்ல சட்டையோட வாழுறாங்களோ அப்பத்தான் நான் சட்ட போடுவேன்னு சபதம் செஞ்சிருக்காரு அப்படின்னு சொன்னாரு ,

இத கேட்ட எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செஞ்சாங்க தெய்வத்துக்கு ஒப்பான அரசர் தங்களுக்கு கிடைச்சிருக்குறத நினச்சு எல்லாரும் சந்தோச பட்டாங்க.

இத எல்லாம் கேட்ட அரசருக்கு அப்பதான் புரிஞ்சது அந்த மந்திரிகள் சொன்னது உண்மை இல்ல ,நாட்டு மக்கள் ரொம்ப கஷ்ட படுறாங்க,நாம்தான் முட்டாள் தனமா வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு இப்படி சட்டை இல்லாம தெருவுல நிக்க வேண்டியதா போய்டுச்சு ,

இனிமே நல்ல படியா ஆட்சி செய்யணும்னு நினச்சு ,அந்த பொய் சொன்ன மந்திரிகளை சிறைல அடைக்க உத்தரவிட்டாரா,

சமயோஜித புதையல தன்னோட மானத்த காப்பாத்துன மந்திரியா தன்னோட முதல் மந்திரியா நியமிச்சு ,மக்களோட கஷ்டம் போக ஆட்சி செய்ய ஆரம்பிச்சாரு

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

 தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
Exit mobile version