Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Emperor And the Holy Book-குளத்தில் அக்பர் – Akbar Birbal Stories

The Emperor And the Holy Book-குளத்தில் அக்பர் – Akbar Birbal Stories:-அக்பர் பீர்பால் கிட்ட இருந்த மகாபாரதத்தை வாங்கி ஒருநாள் படிச்சாரு

இது என்ன பீர்பால் உங்க இதிகாசத்துல ஒரு யானையோட கண்ணீர தொடக்க கடவுளே நேர்ல வந்திருக்காருனு இருக்கு ,ஏன் உங்க கடவுள்கிட்ட தூதுவர்கள் ,வேலைகாரங்க யாருமே இல்லையானு கேட்டாரு

அரசே இந்த கேள்விக்கு நாளைக்கு பதில் சொல்றேன்னு சொல்லிட்டாரு பீர்பால்

மறுநாள் அக்பரோட பேரனை நடை பயிற்சிக்கு கூட்டிட்டு போற வேலைக்காரன கூப்பிட்டாரு

அவருகிட்ட அக்பரோட பேரன் மாதிரியே ஒரு மெழுகு சிலையை கொடுத்து நாளைக்கு நடை பயிற்சிக்கு போகும்போது அக்பர் கண்ணுல படுறமாதிரி இத குளத்துக்குள்ள தள்ளி விட்டுடுன்னு சொன்னாரு

மறுநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை தோட்டத்துல உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க

அப்ப அந்த வேலையாள் அந்த மெழுகு பொம்மையை குளத்துக்குள்ள தள்ளி விட்டுட்டான்

இத பாத்த அக்பர் ஓடி போயி குளத்துல குதிச்சு அந்த பொம்மய எடுத்து பாத்தாரு ,இது என்ன என் பேரன் மாதிரி உடை உடுத்திஇருக்கு இந்த பொம்மைன்னு கேட்டாரு

அப்பத்தான் பீர்பால் சொன்னாரு ,ஏன் அரசே உங்க பேரன் தண்ணில விழுந்ததும் உங்க வேலைக்காரன் யாரையாவது அனுப்பி இருக்கலாமே எதுக்கு நீங்களே போனீங்கனு கேட்டாரு

அக்பருக்கு ஒண்ணும் புரியல ,அப்பத்தான் பீர்பால் சொன்னாரு ,அரசே கடவுள் எப்போதும் தன்னுடைய படைப்புகளை தங்கள் குழந்தைகளாகவே பாக்குறாங்க அதனால் அவுங்களுக்கு என்ன நடந்தாலும் அவரு நேர்ல ஓடிவருவாருனு சொன்னாரு

அப்பத்தான் புரிஞ்சது தன்னோட கேள்விக்கு பதில் சொல்ல நடத்துன நாடகம் இதுனு

Exit mobile version