The Elephant & The Tailor – யானையும் தையல் காரரும் :- ஒரு கிராமத்துல ஒரு குட்டி யானை இருந்துச்சு
அது தினமும் ஊருக்குள்ள வந்து ஊர் மக்கள் கொடுக்குற உணவ சாப்டுட்டு திரும்பி போயிடும்
அந்த ஊருல ஒரு தையல் காரன் இருந்தான் ,அவனுக்கு இந்த யானைய பார்த்தாலே பிடிக்காது
இம்புட்டு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு இந்த யானை உழைக்காம அடுத்தவங்க கொடுக்குற சாப்பிட்ட சாப்பிட்டு நிம்மதியா இருக்கேனு வயித்தெரிச்சல் பட்டான் அந்த தையல் காரன்
ஒருநாள் கிராமத்துக்கு வந்த அந்த யானைக்கு எல்லாரும் நிறய தண்ணி கொடுத்தாங்க
அப்ப ஒரு பையன் அந்த யானை மேல சவாரி செய்யணும்னு கேட்டான்
உடனே அந்த யானை அந்த பையன தன்னோட முதுகுல தூக்கிகிட்டு நடந்துச்சு
இத பார்த்த அந்த பையனோட குடும்பம் ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க ,உடனே அந்த யானைக்கு நிறய சாப்பிட கொடுத்தாங்க
அப்பதான் அந்த தையல்காரனோட கடைக்கு போச்சு அந்த யானை, அந்த யானை மேல கோபத்துல இருந்த அந்த தையல் கடைக்காரன் ஒரு வாழைப்பழத்துல ஊசியை வச்சு அதுக்கு கொடுத்தான்
அந்த வாழை பழத்தை சாப்பிட்ட யானையோட வாயில அந்த ஊசி குத்திடுச்சு ,
யானைக்கு ரொம்ப வெளிச்சத்தால தன்னோட வாய பக்கத்துல இருக்குற ஆத்துல இருக்குற தண்ணில நனைச்சுச்சு
அப்பத்தான் அந்த ஆத்துல நிறய சேரும் சகதியும் இருக்குறத பார்த்துச்சு யானை
தன்னை தொந்தரவு செஞ்ச அந்த தையல் காரனுக்கு நல்ல பாடம் புகட்டணும்னு நினச்ச யானை தன்னோட துதிக்கைல நிறய சேத்து தண்ணிய உறிஞ்சி எடுத்திடுச்சு
நேர தையல் கடைக்காரனோட கடைக்கு போயி ,அங்க இருந்த புது துணிங்க மேல எல்லாம் அந்த சேத்த புஷ்ஷுனு ஊதி அழுக்காகிடுச்சு
சேத்து நீர் பட்ட புது துணிங்க எல்லாம் வேஸ்ட்டா போனதனால அந்த துணிய தைக்க கொடுத்த எல்லாரும் வந்து அந்த தையல் கடை காரன் கிட்ட சண்ட போட்டாங்க
யானைய பார்த்து வயித்தெரிச்சல் பட்ட தன்னோட கடை இப்படி ஆனத நினச்சு வருத்தப்பட்டான் அந்த தையல் கடைக்காரன்