The Crystal Ball – மந்திர தங்க பந்து:-ஒரு நாட்டுல ஒரு பழமையான கிராமம் இருந்துச்சு ,அந்த கிராமத்துல இருக்குற எல்லாரும் விவசாயம் செஞ்சு வாழ்ந்துகிட்டு வந்தாங்க
அந்த கிராமத்துலதான் வீரா அப்படினு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் ,இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாதுனு அவனோட தாத்தா சொல்படி எப்பவும் நடந்துக்குவான்
ஒரு நாள் காட்டு வழியா தன்னோட ஆட்டு குட்டிகளை மேய்ச்சலுக்கு எடுத்துக்கிட்டு போனான் ,அப்ப ஒரு மரத்தடியில் ஒரு தங்க பந்து இருக்குறத பாத்தான் ,அந்த தங்கப்பந்தை அவன் கையில எடுத்தான் ,
அவன் அந்த தங்க பந்த எடுத்தஉடனே அந்த மரம் சொல்லுச்சு ,அதிர்ஷ்டகார பையா உனக்கு என்ன வேணும்னாலும் அந்த தங்க பந்து கொடுக்கும்னு சொல்லுச்சு
உழைக்காம கிடைக்குற எந்த பொருள் மேலயும் அதிக ஆர்வம் இல்லாத அந்த பையனுக்கு அந்த தங்க பந்து மேல ஈர்ப்பு வரல ,இருந்தாலும் அந்த தங்க பந்த எடுத்துட்டு போக மரம் சொன்னதால அத தன்னோட வீட்டுக்கு எடுத்துட்டு போய் வச்சான்
ஒருநாள் அவனோட நண்பன் அவன் வீட்டுக்கு வந்தான் ,தன்னோட நண்பன்கிட்ட அந்த தங்க பந்து பத்தி சொன்னான் வீரா ,மறுநாள் வீரா காட்டுக்கு போனதுக்கு அப்புறமா அந்த பையன் வீரா வீட்டுக்கு வந்து அந்த தங்க பந்த எடுத்துட்டு வெளிய வந்தான்
இந்த பந்து நம்ம கேட்டது எல்லாத்தையும் கொடுக்கும்னு அந்த கிராமத்துல இருக்குற எல்லாருக்கும் சொன்னான் ,உடனே ஒருத்தர் தனக்கு நிறைய தங்கம் வேணும்னு கேட்டாரு ,உடனே ஒரு கூடை நிறைய தங்கம் கிடைச்சது ,இத பாத்தா எல்லாரும் தங்களுக்கு ,தங்கம்,வைரம் ,வைடூரியம்னு எல்லாத்தையும் கேட்டு ஒரே நாள்ள பணக்காரங்களா ஆகிட்டாங்க
வீட்டுக்கு வந்த வீரா அந்த தங்க பந்து செஞ்ச அதிசயத்த பாத்து அடடா இந்த மாதிரி செஞ்சுட்டிங்களே இனிமே உங்களுக்கு என்ன ஆபத்து வரப்போகுதோனு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டான்.
புது பணக்காரர்களா ஆனா எல்லாரும் தங்களோட பணம் காணாம போய்டுமோனு பயந்துகிட்டே இருந்தாங்க ,எல்லாரும் பணக்காரனா ஆனதுனால எல்லாரும் விவசாயத்தை கைவிட்டுட்டாங்க அதனால எல்லாருக்கும் சாப்பிடுறதுக்கு சாப்பாட்டுக்கே பஞ்சம் வந்திடுச்சு
கொஞ்ச நாள்ல ஊருல இருக்குற எல்லாருக்கும் தங்களோட நிலைமைய நினச்சு பயம் வந்திடுச்சு ,அப்புறமா ஊர்ல இருக்குற எல்லாரும் வீரா கிட்ட வந்து எங்கள காப்பதுனு சொன்னாங்க
அதுக்கு வீரா நாம எல்லாரும் அந்த தங்க பந்து கொடுத்த எல்லாத்தையும் அதுவே எடுத்துக்கிட சொல்லி கேப்போம்னு சொன்னாரு ,உடனே எல்லாரும் தங்க பந்துக்கிட்ட எல்லாத்தையும் திருப்ப கொடுத்திட்டு பழையபடி நல்ல படியா உழைச்சு அதுல வர்ற பணத்தை மட்டும் வச்சு வாழ ஆரம்பிச்சாங்க