The Cave Princess Tamil Fables for Kids- குகை ராஜாங்கம் :- ஒரு ஊருல ஒரு அம்மாவும் பொண்ணும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க
அவுங்க ரொம்ப கெட்டவங்களா இருந்தாங்க ,அவுங்க கிட்ட ஒரு லக்சானானு ஒரு வேலைக்கார பொண்ணு வேலை செஞ்சுக்கிட்டு வந்தா
அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா ,ஆனா அவளுக்கு அதிகமா வேலை கொடுக்குறதும் அவள கொடுமைப்படுத்துறதுமா இருந்தாங்க அந்த அம்மாவும் பொண்ணும்
ஒருநாள் தன்னோட செருப்ப போட்டுவிட சொல்லி சொன்னா அந்த கேட்ட பொண்ணு உடனே கிட்ட வந்த லக்ஸானா வோட துணிய கிழிச்சி அவள அழ வச்சா அந்த கெட்ட பொண்ணு
இன்னொரு நாள் அந்த கெட்ட அம்மா பால வேணும்னே கீழ ஊத்திட்டு அத தொடக்க சொன்னா ,
இவ்வளவு கொடுமைகள் நடந்தாலும் ரொம்ப நல்ல பெண்ணான லக்ஸானா அவுங்க சொல்லுற எல்லா வேலையையும் செஞ்சா
ஒருநாள் சாப்பிட்டு கிட்டு இருந்த லக்ஸானாவ காட்டுக்கு போயி விறகு வெட்டி எடுத்துட்டு வர சொன்னா அந்த கெட்ட அம்மா
அத கேட்ட லக்ஸானா நான் எப்படி விறகை தூக்கிட்டு வர முடியும்னு கேட்டா ,உடனே கோபமான அந்த அம்மா அவ சாப்பாட்டை தட்டி விட்டா
ரொம்ப வருத்தப்பட்ட லக்சானா அந்த சாப்பாட்ட எடுத்து தான்னோட பையில வச்சிக்கிட்டு காட்டுக்குள்ள நடந்து போனா
அப்ப அங்க ஒரு நாய்க்குட்டி பசியில மயங்கி கிடந்துச்சு ,இத பார்த்த லக்ஸானாவுக்கு ரொம்ப பரிதாபமா போச்சு ,
உடனே பக்கத்து குளத்துல போய் தண்ணி கொண்டுவந்து கொடுத்தா ,அதோட தான் வச்சிருந்த சாப்பாட்டுல கொஞ்சத்தையும் அந்த நாய்க்கு கொடுத்தா
கொஞ்சம் தெம்பு வந்த அந்த நாய் குட்டி மெதுவா எழுந்து லக்ஸானாவ பாத்துச்சு
விறகு பிறக்க காட்டுக்குள்ள போன லக்ஸானா பின்னாடியே அந்த நாய்க்குட்டி நடக்க ஆரம்பிச்சுச்சு ,அத பார்த்த லக்ஸானா தனக்குனு வச்சிருந்த சாப்பாட்டையும் அந்த நாய்க்கு கொடுத்தா
உடனே ஒரு பெரிய மின்னல் அந்த நாய் மேல அடிச்சுச்சு ,அடுத்த நிமிஷம் அந்த நாய் ஒரு பெரிய இளவரசனா மாறிடுச்சு
இத பார்த்த லக்ஸானா ரொம்ப பயந்தா ,அப்ப அந்த இளவரசன் சொன்னா பயப்படாத நான் சாதாரண மனிதன்தான் ,
இந்த காட்டுக்குள்ள இருக்குற ஒரு சூனிய கார கிழவி எனக்கு இந்த சாபத்தை கொடுத்துச்ச்சு ,அதுல இருந்து நீதான் என்னை காப்பாத்துனனு சொன்னான்
அது எப்படி இளவரசே நான் மயக்கத்துல இருந்த ஒரு நாய்க்கு சாப்பாடுதானே கொடுத்தேன் அதுல எப்படி உங்க சாபம் தேர்ந்துச்சுனு கேட்டா
அதுக்கு அந்த இளவரசன் சொன்னான் எனக்கு சாபம் கொடுத்த அந்த கிழவி சொல்லுச்சு ,யார் சுயநலம் இல்லாம தன்னுடைய பொருட்கள் எல்லாத்தையும் உனக்கு கொடுக்குறாங்களோ அன்னைக்கு உனக்கு சாபம் விலகும்னு சொன்னா
அதனால் இந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டயும் நான் யாசகம் கேட்டுகிட்டே இருந்தேன் ,நீ வேலை பாக்குற கெட்ட அம்மா மகள் கிட்ட கூட நான் யாசகம் கேட்டிருக்கேன் ஆனா அவுங்க எனக்கு ஒண்ணுமே கொடுக்கல
ஆனா நீ நான் கேக்காமலே எனக்கு உணவு கொடுத்த ,அதனால உன் பின்னாடி வந்தேன் நீ உனக்கு வச்சிருந்த சாப்பிட்ட கூட எந்த பிரதிபலனும் பார்க்காம எனக்கு தானமா கொடுத்த அதனால என்னோட சாபம் தீர்ந்துச்சுனு சொன்னான்
லக்ஸானாவை கூட்டிகிட்டு குதிரைல காட்டுக்குள்ள போக ஆரம்பிச்சான் அந்த இளவரசன்
அப்ப ஒரு மிக பெரிய குகைய பார்த்தாங்க ,அதுக்கு முன்னாடி இறங்குன இளவரசன் ,லக்ஸானாவை அந்த குகைக்குள்ள கூட்டிட்டு போனான்
ஒரே இருட்டா இருந்துச்சு அந்த குகை ,கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா ஒரு மிக பெரிய ராஜாங்கமே அந்த குகைக்கு அந்த பக்கமா இருந்துச்சு
இத பார்த்த லக்ஸானாவுக்கு ரொம்ப ஆச்சர்யமா போச்சு ,அங்க இருக்குற அரண்மனைக்கு ரெண்டு பேரும் போனாங்க ,அங்க இத்தனை நாள் அவ வேலை செஞ்சுகிட்டு இருந்த கெட்ட அம்மாவும் பொண்ணும் வேலைக்காரி மாதிரி இருந்தாங்க
இத பார்த்த லக்ஸானா ஏன் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா ,அதுக்கு அந்த அம்மா சொன்னா ,உன்னை கொடும படுத்துனதுக்கு இந்த ராஜ்யத்தின் அரசர் எங்களை சிறை பிடிச்சிட்டு வந்துட்டாரு
இனிமே நாங்க உனக்கு வேலைகாரங்கனு சொன்னா ,இத கேட்ட லக்ஸானா ரொம்ப வறுத்த பட்டா ,இளவரசே இந்த தண்டனை அவுங்களுக்கு வேணாம் அவுங்களை அவுங்க வீட்டுக்கு அனுப்பிடுங்கனு இறக்கத்தோட சொன்னா
இத கேட்ட அரண்மனை வாசிகள் எல்லாரும் ,இந்த இறக்க குணம் இருக்குற இந்த பொண்ணு தான் நம்ம ராஜாங்கத்தோட அடுத்த இளவரசினு சொன்னாங்க
தன்னோட இறக்க குணத்தாலும் நல்ல பண்பாலும் அந்த ராஜாங்கத்துக்கு புது இளவரசியா ஆனா லக்ஸானா