Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Cat & the Birds – பூனை டாக்டரும் பறவைகளும்

The Cat & the Birds – பூனையும் சிறிய பறவைகளும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பூனை இருந்துச்சு

அந்த பூனைக்கு அதிகமா உணவு கிடைக்கல ஏன்னா அங்க வாழ்ந்த பறவைகள் எல்லாம் அதுங்களோட தாத்தா சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிடுச்சுங்க

அதனால அந்த பூனைகிட்ட இருந்து சுலபமா தப்பிச்சுகிட்டே இருந்துச்சுங்க

ஒருநாள் அந்த பறவைகள் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல ,இந்த விஷத்தை பறவைகளோட பேச்சுல இருந்து தெரிஞ்சிகிடுச்சு பூனை

உடனே ஒரு கண்ணாடி மாட்டிகிட்டு பறவைகள் வசிக்கிற இடத்துக்கு போச்சு

நான் தான் பூனை டாக்டர் உங்க தாத்தாவுக்கு மருந்து கொடுக்கணும் என்ன உள்ள விடுங்கனு சொல்லுச்சு

அதுக்கு அங்க இருந்த ஒரு குட்டி பறவை சொல்லுச்சு ,அடடா டாக்டர் நீங்க ஏன் இவ்வளவு இளைச்சி போயிருக்கீங்க உங்க மருந்தை எந்த பறவையும் வாங்கலையோனு கேட்டு சிரிச்சிச்சு

தன்னோட உள்நோக்கத்தை அந்த பறவைகள் புரிஞ்சிகிடுச்சுனு தெரிஞ்சி போன பூனை அசடு வழிஞ்சது

மூத்தோர்கள் சொற்களை அவர்கள் இல்லாதப்பவும் பயன்படுத்தின அந்த பறவைகள் ரொம்ப நாள் எந்த ஆபத்தும் இல்லாம வாழ்ந்துச்சுங்க

நீதி : முட்டாள் தனத்தை தவிர்த்தாலே புத்திசாலி ஆகிடலாம்

Exit mobile version