Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன்

The Burglar in the Well – Mulla Story – கிணத்தில் திருடன் :- முல்லா எல்லா பிரச்னையும் சமாளிக்கிற திறமையோட இருந்தாலும் தன்னோட மனைவி தைரியம் இல்லாம பயந்தாங்கொள்ளியா இருக்குறத மாத்தவே முடியல

என்னதான் காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல இருந்தாலும் முல்லாவோட மனைவிக்கு பய உணர்வு அதிகமா இருந்துச்சு ,அவுங்க எதுக்கு எடுத்தாலும் பயப்புடறத பார்த்த பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் அவுங்கள கிண்டல் செய்ய ஆரம்பிச்சாங்க

இத பார்த்த முல்லாவுக்கு ரொம்ப பரிதாபமா இருந்துச்சு ,ஒவ்வொரு தடவ அவுங்க பயப்புடறப்பவும் ஆறுதல் சொல்லுற முல்லாவுக்கு நாம இல்லாதப்ப தன்னோட மனைவிக்கு பயம் வந்துடுச்சுனா எப்படி சமாளிப்பாங்கனு ரொம்ப வருத்தமா இருந்துச்சு

சின்ன சின்ன பாத்திரம் கீழ விழுந்தா கூட பயத்துல அலற அராம்பிச்சாங்க முல்லாவோட மனைவி , இனிமே தன்னோட மனைவி பயப்படுறத கட்டுப்படுத்தணும்னு முடிவு செஞ்சாரு ,கொஞ்சம் கொஞ்சமா அவுங்களுக்கு ஆறுதலும் , நன்னம்ம்பிக்கை கதைகளையும் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா பயத்துல இருந்து அவுங்கள வெளிய கொண்டுவர ஆரம்பிச்சாரு

ஒரு நாள் ராத்திரில எதோ சத்தம் கேக்குதுனு பயந்து போன முல்லாவோட மனைவி தூக்கிகிட்டு இருந்த முல்லாவ தூக்கத்துல இருந்து எழுப்புனாங்க , அப்பத்தான் முல்லாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,நீதான் இப்ப தைரியமான பொன்னா மாறிட்டியே நீயே போயி தோட்டத்துல என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வானு சொல்லி அனுப்புச்சாறு

கொஞ்சம் தைரியத்த வர வச்சுக்கிட்டு தோட்டத்து பக்கம் போன முல்லாவோட மனைவி வேற யாரும் அங்க இல்லாததை பார்த்ததும் நல்ல தைரியத்தோடு வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சாங்க ,அப்பத்தான் அங்க இருந்த கிணத்துல எதோ சத்தம் கேட்டுச்சு

உடனே பதட்டமாகிட்டாங்க முல்லாவோட மனைவி, உதவிக்கு முல்லாவ கூப்பிடலாம்ணு யோசிச்ச அவுங்க கிணத்துக்குள்ள எட்டி பார்த்தாங்க . அவுங்களோட முகம் கிணத்துல இருந்த தண்ணியில பிரதி பலிச்சுச்சு ,அத பார்த்த முல்லாவோட மனைவி ஏற்கனவே பயத்துல இருந்ததால ரொம்ப பயந்துட்டாங்க ,அடடா உள்ள ஒரு திருடி ஒளிஞ்சு இருக்காளேன்னு கத்திகிட்டே முல்லா கிட்ட ஓடிவந்து விஷயத்தை சொன்னாங்க

உடனே முல்லா அது என்ன திருடி கிணத்துக்குள்ளயா ஒளிஞ்சு இருப்பாங்க ,நீ பார்த்தியானு கேட்டாரு ,அப்ப முல்லாவோட மனைவி சொன்னாங்க ஆமாம் நான் அந்த அம்மாவோட முகத்தை நல்லா பார்த்தேன்னு சொன்னாங்க.

உடனே முல்லா வெளியில வந்து கிணத்த எட்டி பார்த்தாரு ,அங்க முல்லாவோட முகம்தான் தெரிஞ்சுச்சு இத பார்த்த முல்லா என்ன நடந்து இருக்குன்றது புரிஞ்சி போச்சு ,உடனே இங்க பாரு அந்த திருடி தன்னோட புருசனோட திருட வந்திருக்கா எனக்கு அந்த ஆளோட முகம் தெரியுதுனு சொன்னாரு

உடனே முல்லாவோட மனைவியும் சேர்ந்து உள்ள எட்டி பார்த்தாங்க ,உடனே முல்லா சொன்னாரு இப்ப பாரதிய புருஷன் பொண்டாட்டியோட திருட வந்திருக்காங்கனு சொன்னாரு ,முல்லா துணைக்கு இருக்குறதால பயம் தெளிஞ்சு நல்லா கிணத்த பார்த்தப்பாதான் அவுங்களுக்கு புரிஞ்சது இது நம்ம முகம் ஆச்சே

நாமதான் பயத்துலயும் ,பட படப்புலயும் தண்ணியில தெரிஞ்ச நம்ம முகத்த திருடின்னு நினைச்சு இப்படி நடந்து கிட்டமேன்னு வருத்தப்பட்டாங்க ,அப்பதான் பயம் நல்லா இருக்குற எல்லாரையும் பதட்டமடைய செய்யுது ,தவறான செயல்களை செய்ய வைக்குதுனு புரிஞ்சிக்கிட்டாங்க

-குழந்தைகளாகிய உங்களுக்கு பயம் வந்துச்சுனு வச்சுக்கோங்க ஒரு நிமிஷம் அதே இடத்துல இருந்து என்ன நடக்குதுன்னு புரிஞ்சிகிட்டு அங்க இருந்து ஓடி போகாம,பயத்த வெல்லணும்னு முடிவு செஞ்சீங்கனாவே ,பயம் உங்கள விட்டு ஓடி போயிடும் .

Exit mobile version