Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Best of All – அக்பரின் சந்தேசம்

The Best of All – அக்பரின் சந்தேசம் :-அக்பர் ஒருநாள் வினோதமான மூணு கேள்விகள் கேட்டாரு

1.யாருடைய மகன் பயனுள்ளவன் 2.யாருடைய பல் பயனுள்ளது 3.மனிதனின் எந்த திறமை நல்லது

இந்த மூணு கேள்விகளையும் அக்பர் கேட்ட பிறகு ,அரசவையில இருந்த பெரியோர்கள் எல்லாரும் ஒரு சேர முடிவு பண்ணி ஒரு மனதா விடைகளை சொன்னாங்க

அரசருடைய மகன் பயனுள்ளவன் ,யானையோட பல் பயனுள்ளது ,அறிவு தான் ஒரு மனிதனுக்கு தேவையான திறமைனு சொன்னாங்க

இந்த கேள்விகள் சரியா இருந்தாலும் அக்பருக்கு திருப்தி இல்லை

அதனால் பீர்பால் வந்ததும் இந்த கேள்விகளை திரும்ப கேட்டாரு

பீர்பால் யோசிக்கவே இல்லை டக்குனு பதில் சொல்ல ஆரம்பிச்சாரு

அரசே பசுவின் மகன்தான் இந்த உலகத்துலயே பயனுள்ளவன் ,அவனோட சாணி கூட நமக்கு பயன்தருது

ஏர் கலப்பையோட பல்லுதான் இந்த உலகத்துலயே பயனுள்ளது ,அது இல்லைனா இந்த உலகத்துல பசி வந்திடும்

துணிவுதான் எல்லாருக்கும் இருக்கவேண்டிய திறமை ,கற்று தேர்ந்து அறிவோட இருக்கிறவர் கூட துணிவு இருந்தான் மத்தவங்களோட விவாதிக்க ,தர்க்கங்களை எதிர்கொள்ள முடியும்னு சொன்னாரு

விளக்கமா சொன்ன பீர்பாலோட பதில் அக்பருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு

Exit mobile version