Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Bag of Coins – யாருடைய பணம் Akbar Birbal Kadhai

The Bag of Coins – யாருடைய பணம் Akbar Birbal Kadhai:-அக்பரும் பீர்பாலும் அரசவையில இருந்தாங்க ,அப்ப காவலர்கள் ரெண்டு பேர கூட்டிட்டு வந்தாங்க

அவனுங்க யாருனு கேட்டாறு அக்பர் ,அதுக்கு அந்த காவலாளி சொன்னாரு ,அரசே இவர் ஒரு எண்ணை வியாபாரி ,இவர் ஒரு இறைச்சி வியாபாரி

இவுங்க ரெண்டுபேரும் நம்ம நகரத்துல கடை வச்சிருக்காங்க ,இவுங்க ரெண்டு பேரும் தெருவுல இறங்கி சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க அதனாலதான் இங்க கூட்டிட்டு வந்தோம்னு சொன்னாரு

பீர்பால் கேட்டாரு எதுக்கு நீங்க ரெண்டுபேரும் சண்ட போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னு

அதுக்கு அந்த எண்ணை வியாபாரி சொன்னாரு,பீர்பால் அவர்களே நான் வியாபாரம் செஞ்சு வந்த காசு எல்லாத்தையும் வாங்கி ஒரு தோல் பையில போடுறது வழக்கம் ,அப்ப என் கடைக்கு வந்திருந்த இந்த இறைச்சி வியாபாரி எண்ணை கேட்டாரு நான் திரும்பும்போது அந்த தோல் பைய இவரு எடுத்துகிட்டாருனு சொன்னாரு

அதுக்கு அந்த இறைச்சி வியாபாரி ,ஐயா நான் இறைச்சி வியாபாரம் செஞ்சு சேத்து வச்ச காச வீட்டுக்கு தோல் பைலதான் எடுத்துட்டு போவேன் ,அப்படி போகும்போது எண்ண வாங்க இவர் கடைக்கு போனேன் ,என் பையையும் பணத்தையும் பார்த்துட்டு இவரு நாடகம் போடுறாருனு சொன்னாரு

ரெண்டுவியாபாரிகள் சொல்றதும் உண்மை மாதிரியே இருந்துச்சு ,இத எப்படி பீர்பால் சமாளிக்க போறாருனு ஆவலோட பார்த்துகிட்டே இருந்தாரு அக்பர்

அப்பத்தான் பீர்பால் ஒரு பாத்திரத்துல தண்ணி கொண்டுவர சொன்னாரு ,அந்த தோல் பைய வாங்கி ஒவ்வொரு காசா எடுத்து தண்ணியில போட்டாரு ,கொஞ்சமா எண்ண அந்த தண்ணி மேல மிதக்க ஆரம்பிச்சது

பீர்பால் சொன்னாரு இது கண்டிப்பா எண்ணெய் கடைக்காரரோட காசுதான் ,அவர் கையில இருந்த எண்ண தான் காசுல ஒட்டி இப்ப தண்ணில மிதக்குது ,இப்ப உண்மைய சொல்லுனு சொல்லி இறைச்சி வியாபாரிய பார்த்தாரு

தன்னோட பொய் வெளிப்பட்டத உணர்ந்த இறைச்சி வியாபாரி உண்மையா சொல்லிட்டு மன்னிப்பு கேட்டாரு

Exit mobile version