Site icon தமிழ் குழந்தை கதைகள்

The Animals & the Plague – காட்டு மிருகங்களும் கொடூர நோயும்

The Animals & the Plague – காட்டு மிருகங்களும் கொடூர நோயும் :- காட்டுக்குள்ள ஒரு கொள்ளை நோய் பரவுச்சு

அதனால நிறய மிருகங்க தேவையில்லாம செத்துப்போச்சு ,அதனால சிங்க ராஜா தன்னோட சபைய கூட்டுனாரு

அந்த சபைக்கு காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் வந்துச்சுங்க

உடனே சிங்க ராஜா சொல்லுச்சு ,இந்த காட்டுக்குள்ள நிறய பாவம் செய்யுறவங்க இருக்காங்க

அதனாலதான் இந்த காட்டு தெய்வம் ரொம்ப கோபப்பட்டு நம்மளுக்கு இந்த கொள்ள நோய கொடுத்து இருக்காரு

அதனால இந்த காட்டுல அதிகம் பாவம் செஞ்சவர கடவுளுக்கு பலி கொடுத்து கடவுளோட கோபத்த தனிக்கனும்னு சொல்லுச்சு

உடனே எல்லா மிருகங்களும் அதுக்கு சரினு சொல்லுச்சுங்க

அப்ப சிங்க ராஜா சொல்லுச்சு ,நான் நிறய ஆடுகளையும் , மாடுகளையும் ,சின்ன சின்ன மிருகங்களையும் இரக்கம் இல்லாம அடிச்சி தின்னுருக்கேன் அதனால நான்தான் பெரிய பாவினு சொல்லுச்சு

உடனே புலி எழுந்திரிச்சி அரசே ,நீங்க இறக்கமுடைய அரசரா இருந்தாலும் உங்களுக்கு வேட்டையாடி உணவு உண்ணும் வேலைய கடவுள் கொடுத்திருக்கார் ,அதனால நீங்க செஞ்சது பாவம் இல்லைனு சொல்லுச்சு

உடனே சிங்கத்தோட பாவம் மன்னிக்க பட்டுச்சு ,தொடர்ந்து புலி சொல்லுச்சு நான் பெரிய பெரிய வரி குதிரை ,அதோட குட்டி எல்லாத்தையும் தேவையில்லாம கொன்னுருக்கேன் அதனால நான்தான் பாவினு சொல்லுச்சு

அதுக்கு கரடி எழுந்திரிச்சி ,இது பாவம் இல்லை நீங்க அப்படி வரி குதிரைகளை கொல்லலைனா அது பெருகி இந்த காட்டையே நாசம் செஞ்சுடும் அந்த ஆபத்தை தடுத்ததால உங்க பாவமும் மன்னிக்க படுதுனு சொல்லுச்சு

தொடர்ந்து நான் நிறய தேனீ சேமிச்சு வச்சிருக்க தேனை திருடி சாப்பிட்டு இருக்கேன் அதனால நான் தான் அந்த பாவி என்ன தூக்குல போடுங்கனு சொல்லுச்சு

அதுக்கு ஓநாய் சொல்லுச்சு நீங்க தேன் எடுக்கலைனா தேனீக்களே அந்த தேன சாப்பிட்டு முடிக்க முடியாது ,அதிகமா இருந்த தேன சாப்பிட்ட உங்க குற்றமும் மன்னிக்க படுதுனு சொல்லுச்சு

இப்படியே வலிமை வாய்ந்த மிருகங்களோட குற்றங்களும் ,பாவங்களும் மன்னிக்கப்பட்டுக்கிட்டே இருந்துச்சு

அப்பா ஒரு கழுதை எழுந்திரிச்சி ,நான் எந்த பாவமும் தெரிஞ்சு செய்யிறது இல்ல ,ஒருநாள் பக்கத்து கிராமத்து விவசாயியோட வீனா போன பதர்களை கொஞ்சம் தின்னிருக்கேன்னு சொல்லுச்சு

உடனே எல்லா மிருகங்களும் கோப பட்டுச்சுங்க ,அடுத்தவங்களோட பொருளை சாப்பிட்டு ரொம்ப பெரிய பாவத்தை செஞ்ச கழுதையால தான் இந்த நோய் காட்டுக்குள்ள வந்திருக்குனு சொல்லி கத்துச்சுங்க

உடனே அந்த கழுதை தூக்குல போடப்பட்டுச்சு

இப்படித்தான் வலிமையான தலைவர்கள் தங்கள் குற்றங்களை பாதுகாத்துக்கிட பொதுமக்களோட தவற ஊதி ஊதி பெருசாக்குறாங்கனு தனக்குள்ள சொல்லிகிட்ட குரங்கு தன்னோட வேலைய மட்டும் பார்க்க ஆரம்பிச்சுச்சு

நீதி :-வலிமை மிக்கவர்களின் தீய செயல்களால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்

Exit mobile version