Teaching Skills – Woodcutter short story – மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு :-ஒரு காட்டு பகுதியில ராமு சோமுன்னு ரெண்டு விறகு வெட்டிங்க விறகு வெட்டிக்கிட்டு இருந்தாங்க
அவுங்களுக்கு இதுதான் வேலை காலைல இருந்து விறகு வெட்டி சாயங்காலம் சந்தைல போயி அந்த விறக வித்து சம்மதிச்சாங்க
அன்னைக்கு அவுங்க விறகு வெட்டும்போது ஒரு பிச்சகாரண பாத்தாங்க ,அவன் ரொம்ப ஒல்லியா இருந்தான்
அவன் சாப்பிடுறதுக்கு எதாவது இருந்தா தாங்கன்னு அவனுங்க கிட்ட கேட்டான்
அவன்மேல பரிதாப பட்ட ராமு அவனுக்கு சாப்பாடு பொட்டணத்த கொடுக்க போனான்
சோமு அத தடுத்து நீ உழைக்காம சாப்பிட கூடாது என்கிட்டே இன்னொரு கோடரி இருக்கு அத வச்சு கொஞ்சம் விறகுவெட்டுன்னு சொன்னான்
அவனுக்கு விறகு வெட்ற முறையையும் சொல்லி கொடுத்தான்
ரொம்ப பசியா இருந்தாலும் அந்த பிச்சைக்காரனும் நிறைய விறகு வெட்டினான்
மூணு பேரும் சந்தைக்கு போயி தாங்க வெட்டுன விறகு எல்லாத்தையும் வித்தாங்க
பிச்சைக்காரனுக்கு ரொம்ப சந்தோசம் அவன் வெட்டுனா விறகு நிறைய காசுக்கு வித்த சோமு அவனுக்கு புது கோடரியும் வாங்கி கொடுத்தான்
மிச்சம் இருக்குற காசுக்கு நல்ல சாப்பிடும் வாங்கி கொடுத்தான்
இத பாத்த ராமுக்கும் ரொம்ப சந்தோசம் , நான் அவனுக்கு சாப்பிட கொடுத்திருந்த அவனுக்கு நாளைக்கு திரும்பவும் பசிக்கும்
அதனால் அவன் கடைசில பிச்சைகாரணவே இருந்திருப்பான் இப்ப உன்னோட உதவியினால் அவனும் நம்மள போல விறகு வெட்டி சம்பாதிக்கிற மனிதனா மாறிட்டான் அப்படினு சொன்னான்
அன்னைக்கு இருந்து அந்த பிச்சைக்காரன் நல்லா உழைச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சான்
பழமொழி :- மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு