Taste and Life Giver -Akbar Birbal Story-ருசி மற்றும் உயிர் கொடுப்பது எது?:-பீர்பால் ஒருநாள் அரசவையில இருந்தப்ப அக்பர் கேட்டாரு பீர்பால் இந்த உலகத்துல இருக்குற எல்லா நாட்டு மக்களுக்கும் ருசி கொடுக்குறது எது ,உயிர் கொடுக்குறது எதுன்னு கேட்டாரு
அரசே நாளைக்கு உங்களுக்கு அந்த ரெண்டையும் கொண்டுவரேனு சொன்னாரு பீர்பால்
மறுநாள் அரசவைக்கு வந்த பீர்பால் ஒரு கிண்ணத்துல உப்பையும் ,ஒரு கிண்ணத்துல தண்ணியையும் வச்சிருந்தாரு
இத பார்த்த அக்பர் விளக்கமா சொல்ல சொல்லி கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு ,அரசே உலகத்துல இருக்குர எல்லா நாட்டவருக்கு உணவு பழக்கம் வேற வேறயா இருந்தாலும் இந்த உப்புதான் அலாதியான ருசிய தருது ,இனிப்பு பலகாரத்துல கூட உப்போட ருசி தேவைப்படுது
அதேமாதிரி இந்த உலகத்துல இருக்குற மனிதர்கள் மட்டுமில்லாம ,மரம் ,செடி,கொடி ,விலங்குகள் ,பறவைகள் ,பூச்சி ,புழுக்கள்னு எல்லாத்துக்கும் மூல காரணம் இந்த தண்ணிதான்னு சொன்னாரு