Good King Tamil Proverb Story – நல்ல ராஜா – மாற்றம் பழமொழி கதை :- ஒரு ஊர்ல ஒரு ராஜா வாங்கிட்டு வந்தாரு அவருக்கு தன்னோட மக்கள் மேல ரொம்ப பாசம் இருந்துச்சு
மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு அவர் ஆர்வமாக இருந்தார்,
மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து கொள்ள ஒரு நாள் அவர் நடைபயணம் கிளம்பினார்
குதிரை கூட இல்லாம வெறும் காலோட மக்களோட மக்களா நடந்து போனாரு , போகுற வழி எல்லாம் மக்களோட குறைகளை கேட்டு தெரிஞ்சு கிட்டாரு
எல்லா ஊர் மக்களும் ராஜா உங்களோட ஆட்சியில எங்களுக்கு எந்த குறையும் இல்லைனு சொன்னாங்க
இத கேட்ட ராஜா சந்தோஷப்பட்டாலும் மனசுல ஒரு சின்ன கவலை உருவாச்சு ,அது என்னன்னா அவரோட கால் நடந்து நடந்து வலிக்க ஆரம்பிச்சது
அடடா நம்ம கால் வலிக்குதே இது மாதிரியே நம்ம குடிமக்களோட கால்களும் வலிக்குமேனு நினச்சுகிட்டே அரண்மனை வந்து சேர்ந்தாரு
மறுநாள் அமைச்சரவையை கூட்டி நம்ம நாட்டு சாலைகள் எல்லாம் மண்ணும் கல்லுமா இருக்கு இதுல நடக்குற நம்ம நாட்டு மக்களுக்கு கால்வலிக்கும்
அதனால நம்ம நாட்டு சாலைகள் எல்லாத்தையும் தோலால் ஆன பாய் போட்டு மூடணும்னு சொன்னாரு
இத கேட்ட மந்திரிமார்கள் எல்லாரும் அதிர்ச்சி ஆனாங்க , அரசர் சொல்றமாதிரி இந்த தோல் பாய் போட்டம்னா அரசு கஜானாவே கலியாயிடுமே அப்படினு யோசிச்சாங்க
அப்ப ஒரு வயசான மந்திரி ராஜா கிட்ட வந்து உங்க கால் நடக்கும்போது வலிச்சுச்சுன்னா ஏன் சாலை முழுசும் பாய் விரிக்கணும் சின்ன தோல் துணியால உங்க கால மூடிக்கலாமேன்னு சொன்னாரு
அடடா அவசர பட்டு இப்படி ஒரு திட்டம்போட்டு மக்களோட வரிப்பணத்தை வீணடிக்க பாத்தோமே அப்படினு யோசிச்ச அரசர்
எல்லா மக்கலும்மும் தோல் செருப்பு கொடுக்க திட்டம் அறிவிச்சாரு
நீதி : உலகத்தை மாத்தணும்னு நினைக்காம முதல்ல நாம் மாறவேண்டும்