Tamil Moral Story – Vivekananda history in tamil :- ஒருமுறை விவேகானந்தர் ராஜஸ்த்தான் மாநிலத்துல ஒரு சொற்பொழிவு செஞ்சுகிட்டு இருந்தாரு
அப்ப நிறைய பேர் நிறைய கேள்விகள் கேட்க ஆரம்பிச்சாங்க,தொடர்ந்து மூணு நாளா தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடந்துச்சு
விவேகானந்தர் தண்ணிகூட குடிக்காம இதுல கலந்துக்கிட்டாரு அத பாத்த ஒரு ஏழ்மையான விவசாயி
ஐயா நீங்க சாப்பிடாம இருக்கேங்க உங்களுக்கு பசிக்கலயான்னு கேட்டாரு
அதுக்கு நீங்க வேணா எனக்கு சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வாங்க அப்படினு சொன்னாரு
ஐயா நான் ஒரு ஏழை விவசாயி இங்க நிறய பணக்காரங்க இருக்காங்க நான் சாப்பாடு கொடுத்தா அது நல்லா இருக்காதுன்னு சொன்னாரு
அதுக்கு எல்லா பணக்காரங்களும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க
நீங்க நான் சொல்ற எல்லாத்தையும் கேட்டாலும் என்னோட பசிய முதல்ல உணர்ந்தவர் இவர்தான் இவரு சாப்பிட தான் சாப்பிடுவேன்
நீங்க கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லனு சொன்னாரு
விவேகானந்தரோட இந்த தீர்மானத்த பாத்து எல்லோரும் வியந்தாங்க