தங்கப்பதக்கம் – Tamil Moral Story :- நேசன் ஒரு அமைதியான பையன் அவனோட அம்மாவும் அவனைப்போலவே நல்லவங்களா இருந்தாங்க
அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாமலும், உலைக்காம கிடைக்குற பொருளுமெல அசைவைக்காமலும் இருந்தாங்க
ஒருநாள் ஆடுமேய்க்க போன நேசனுக்கு ஒரு தங்க பதக்கம் கிடைச்சது
இதுயென்ன பளபளன்னு இருக்குன்னு அத தேச்சு பாத்தான் நேசன் ,உடனே அந்த தங்கப்பதக்கம் பேச ஆரம்பிச்சது நான் பழங்காலத்து பொருள் என்னால உங்களுக்கு என்ன ஆசை இருந்தாலும் நிறைவேற்ற முடியும்னு சொல்லுச்சு
அடுத்தவங்க பொருள்மேல ஆசை இல்லாத நேசனுக்கு இதுல ஒரு ஆர்வமும் வரல உடனே அந்த பதக்கத்த பத்தி அவுங்க அம்மா கிட்ட சொன்னான் அவுங்களும் இத ஒரு பொருட்டாவே எடுத்துக்கள
சில காலங்களுக்கு அப்புறமா வேஷன் அப்படிங்கிற நேசனோட நண்பன் அந்த பதக்கத்த பாத்தான் அடடா இத நாம திருடுகிட்டா என்னனு யோசிச்சு
யாருமில்லாத நேரம் பாத்து நேசனோட குடிசைக்குள்ள போயி அந்த பதக்கத்த எடுத்தான்
உடனே அந்த பதக்கம் பேசுச்சு, அத கேட்ட வேஷன் தனக்கு மளிகை வேனும் , நிறைய பணம் வேணும்னு கேட்டான் உடனே அவன் கேட்டது எல்லாம் கிடைச்சது
இந்த பதக்கத்த பத்தி அந்த ஊர்ல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சது
உடனே எல்லாரும் தங்களுக்கு வேணும்ங்கிறத கேட்டு வாங்குநாங்க
கிராமத்து இருக்குற எல்லாருமே பணக்காரங்களா மாறினாங்க வேலைக்கு போக வேண்டிய அவசியமே இல்லாம போச்சு
அதனால எல்லோரும் வெட்டியா உக்காந்து பேசுனாங்க அதனால அங்க நிறைய தகராறு நடந்துச்சு
போக போக அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் நிம்மதியா இல்லாம போச்சு
ஆனா அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேசனுக்கு மட்டும் ஒண்ணுமே ஆகல அவன் குடும்பம் மட்டும் நிம்மதியா தூங்குச்சு
இதப்பாத்த அந்த கிராம மக்கள் எல்லாம் அந்த தங்க பதக்கத்த தேச்சு எங்களுக்கு நீ கொடுத்தத எல்லாத்தையும் எடுத்துக்கன்னு சொன்னாங்க
அடுத்த நாள்ல இருந்து எல்லாரும் நல்லா உழைக்க ஆரம்பிச்சாங்க
ஊர் நல்ல பாடிய மாறுச்சு அப்பத்தான் எல்லாரும் சந்தோசமா வாழ ஆரம்பிச்சாங்க