யானை நண்பர்கள் – Tamil Elephant Stories :- ஒரு காலத்துல ஒரு பெரிய காடு இருந்துச்சு, அங்க மான் ,முயல்,நரி,பசுனு சின்ன சின்ன விலங்குகள் மட்டும் சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்துச்சு.
ஒரு கோடைகாலத்துல பஞ்சம் ஏற்பட்டதல்ல பக்கத்துக்கு காட்டுல இருந்து ஒரு யானைக்கூட்டம் இந்த காட்டுக்கு வந்துச்சு
யானை மாதிரி பெரிய உருவம் கொண்ட மிருகங்களை அந்த காட்டுல பாக்காததால அந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்துச்சுங்க.
அடடா இந்த யானைகளை பாத்தாலே பயமா இருக்கேனு ஓடி ஒழிய ஆரம்பிச்சதுங்க.
பக்கத்துக்கு கிராமத்துல இருந்து மனிதர்கள் இந்த காட்டுக்கு வந்து வேட்டையாடுறது வழக்கம்.
சின்ன சின்ன மிருகங்கள் எல்லாம் ரொம்பவே பயப்பட ஆரம்பிச்சதுங்க. அடடா இந்த மனிதர்கள் தொல்லை தாங்க முடியலையே எப்படியோ நம்மள பிசிச்சுட்டு போயிடறாங்களேன்னு எல்லா மிருகமும் வறுத்த பட்டுச்சுங்க
அப்பத்தான் ஒரு யானை குட்டி இவுங்க பேசுனது கேட்டுச்சு, நண்பர்களே பயப்பட வேண்டாம் உடல் உருவத்த வச்சு ஒருதரோட குணத்தை எடை போடாதீங்க எங்களையும் உங்களோட நண்பர்களா நினைச்சுக்கோங்க நாங்க உங்களுக்கு உதவி பன்றோம்னு சொல்லச்சு
அன்னைக்கு இருந்து அந்த யானை கூட்டம் எல்லாம் சேர்ந்து காட்டு ஓரத்துல இருக்குற பதைக்கிட்ட நிக்க ஆரம்பிச்சதுங்க
மனித வேட்டையர்கள் யாராவது காட்டுக்குள்ள வர முற்பட்ட உடனே பெரிய குரல்ல கத்த ஆரம்பிச்சதுங்க.
யானையோட சத்தம் அதிகமா கேக்குறதால மனிதர்கள் யாரும் அந்த காட்டுக்குள்ள வர்றத நிறுத்திட்டாங்க.
அதுக்கு அப்புறமா யானை நண்பர்களோட சேந்து அந்த காட்டு விலங்குகளும் ரொம்ப மகிழ்ச்சியா வாழ ஆரம்பிச்சதுங்க
நீதி – உருவத்த பாத்து ஒருத்தரோட குணத்த கணிக்க கூடாது