The Adventure Of Tom Sawyer Story in Tamil – சுட்டி பையன் டாம் :- ஒரு கிராமத்துல டாம்னு ஒரு சுட்டி பையன் இருந்தான்
அவன் அவுங்க அம்மா கூட வாழ்த்துகிட்டு வந்தான் ,எப்பவும் செட்ட செஞ்சுக்கிட்டே இருப்பான்
செட்ட செஞ்சுட்டு வீட்டுக்குள்ள எங்கயாவது ஒளிஞ்சுக்கிடுவான்,அவன தேடி கண்டுபிடிக்கிறதே அவுங்க அம்மாவுக்கு பெரிய வேலையா போகும்
ஒருநாள் டாம் காணோம்னு வீடு முழுசும் தேடுன்னாங்க ,எங்க தேடியும் அவன் கிடைக்கவே இல்ல,அப்பத்தான் ஜாம் பாட்டில எடுத்து எல்லாத்தையும் திண்ணுட்டு மெதுவா வெளிய வந்தான் டாம்
அவன் செஞ்ச திருட்டு தனத்த தெரிஞ்சுக்கிட்ட அவுங்க அம்மா அவன பிடிச்சு அடிக்க போனாங்க,இப்படி செட்ட செய்ற இவான எப்படி தண்டிக்கிறதுன்னு யோசிச்சாங்க
அவன்கிட்ட வந்த இன்னைக்கு நீ செஞ்ச சேட்டைக்கு எல்லாம் நம்ம வீடு வேலி முழுசும் வெள்ளையடிக்கிற வேலைய நீதான் செய்யணும்னு சொன்னாங்க
தான் செஞ்ச சேட்டைக்கு கிடைச்ச தண்டனைய நினச்சு வறுத்த பாத்துக்கிட்டே வேலிக்கு வெள்ளையடிக்க ஆரம்பிச்சான் டாம்
ஆப்ப அங்க வந்த டாமோட நண்பன் என்னடா பண்ணிக்கிட்டு இருக்கன்னு கேட்டான்
உடனே டாமுக்கு ஒரு யோசனை வந்துச்சு , டே இது வெள்ளையடிக்குற விளையாட்டு இந்த வேலைய செய்றதுக்கு எங்க அம்மாவுக்கு நான் சேத்து வச்சிருந்த காச கொடுத்து இதுக்கு அனுமதி வாங்கிருக்கேன்னு சொன்னான்
அதுக்கு ஆச்சர்யமா பாத்த அந்த பையன் ,நானும் வெள்ளையடிக்கவான்னு கேட்டான் ,அதுக்கு டாம் ம்ஹும் முடியாது முடியாது ,எனக்கே காசு கொடுத்துதான் இந்த வெள்ளையடிக்கிற விளையாட்டுக்கு அனுமதி கிடைச்சிருக்குன்னு சொன்னான்
உடனே அந்த பையன் என்கிட்ட மீன் பிடிக்கிற தூண்டில் முள் இருக்கு இத வச்சுக்கிட்டு எனக்கு வெள்ளையடிக அனுமதி கொடுன்னு கேட்டான்
தன்னோட திட்டம் சரியா வேலை செஞ்சத நினச்சு சந்தோசப்பட்ட டாம் அவன்கிட்ட வெள்ளையடிக்குற வேலைய ஒப்படைச்சுட்டு மரத்தடில உக்காந்து வேடிக்கை பாக்க ஆரம்பிச்சான்
அடுத்து அவனோட இன்னொரு நண்பன் வந்தான் அவன் கிட்டயும் இதே கதைய சொன்னான்
உடனே அவன் தன்கிட்ட இருந்த சீட்டு கட்ட அவன்கிட்ட கொடுத்துக்கு வெள்ளையடிக்க அனுமதி வாங்கி வெள்ளையடிக்க ஆரம்பிச்சான்
அடுத்ததடுத்து அவனோட நண்பர்கள் கிட்ட இருந்த பொருட்கள எல்லாம் வாங்கிகிட்டு வெள்ளையடிக்குற தண்டனையில இருந்து தப்பிச்சதும் இல்லாம ,நிறைய சம்பாதிக்கவும் செஞ்சான் டாம்
சயந்தரத்துக்குள்ள எல்லா வேலையும் முடிஞ்சு வேலி வெள்ள வெளேர்னு மாறிடுச்சு ,அத அவுங்க அம்மாகிட்ட காமிச்சான் டாம்
நடந்தத எல்லாத்தையும் வீட்டு ஜன்னல் வழியா பாத்து ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்ட அவுங்க அம்மா அவன பாராட்டறதா இல்ல ரெண்டு மொத்து மொத்துறதான்னு ஒரே குழப்பம் வந்துச்சு ,
இருந்தாலும் அவனோட சுட்டி தனத்தையும் சமயோஜித புத்தியையும் பார்த்து தனக்குள்ள சிரிச்சிக்கிட்டாங்க