Site icon தமிழ் குழந்தை கதைகள்

Taking Responsibility -நல்ல குடும்பம்

Taking Responsibility -நல்ல குடும்பம்:-ஒரு கிராமத்து நடுவுல ரெண்டு குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ரெண்டு குடும்பமும் வசதி வாய்ப்புள ஒரே மாதிரி இருந்துச்சு

ஆனா ஒரு குடும்பம் எப்ப பாத்தாலும் அவுங்களுக்குள்ளேயே சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,ஆனா இன்னொரு குடும்பம் எப்ப பாத்தாலும் அமைதியவே இருப்பாங்க அவுங்களுக்கு அமைதியும் நல்ல மன நிலைமையும் எப்பவும் இருந்துச்சு

ஒருநாள் ரொம்ப சண்ட போட்ட அந்த குடுப்பதோட தலைவர் வாசல்ல வந்து உக்காந்து யோசிச்சாறு ,எப்ப பாத்தாலும் சண்ட போட்டுக்கிட்டே இருக்குற நாம எப்படி பக்கத்துக்கு வீடு குடும்பம் மாதிரி அமைதியா வாழலாம்னு யோசிச்சாறு

உடனே சத்தம் போடம பக்கத்துக்கு வீட்டு ஜன்னல் வழியா பக்கத்து வீட்ட எட்டி பாத்தாரு ,அப்ப அந்த வீட்டோட தலைவர் தவறுதலா ஒரு தம்ளர்ல இருக்குற தண்ணிய கொட்டிட்டாரு

உடனே அந்த வீட்டு குழந்தைகள் அடடா அப்பா நாங்க தவறுதலா அந்த தண்ணி தம்ளர அங்க வச்சுட்டடோம் தயவு செஞ்சு மன்னிச்சுடுங்கனு சொல்லுச்சுங்க ,அடுத்ததா அவரோட மனைவி வந்து நான்தான் தெரியாம தம்பலர எடுக்க மறந்துட்டேனு சொல்லி அந்த தண்ணிய தொடைக்க வந்தாங்க

ஆனா தன்னோட செய்கைக்கு நீங்க யாரும் கரணம் இல்லைனு சொன்ன அந்த தலைவர் தானே ஒரு துணிய எடுத்து அந்த இடத்தை சுத்தம் செஞ்சாரு

அப்பதான் இத எல்லாத்தையும் ஒளிஞ்சிருந்து பாத்துகிட்டு இருந்த சண்டைக்கார குடும்பத்தோட தலைவர் தன்னோட தவரோ அல்லது அடுத்தவங்களோட தவறோ தங்களோட பங்கு இந்த தவறை ஏத்துக்கிட்டு அத நிவர்த்தி பண்றதுலதான் இருக்கணுமே தவிர ,ஒரு தப்பு நடக்கும் போது எப்படி தன்மேல பலி இல்லைங்கிறத மட்டும் நிரூபிக்க சத்தமா சண்ட போடுறதுல எந்த நன்மையும் இருக்க போறது இல்லைங்கிறத தெரிஞ்சுக்கிட்டாரு

உடனே தன்னோட குடும்பத்தையும் இதுமாதிரி பழக்க நினைச்சாரு ,அதுக்கு முதல்ல தான் மாறணும்ங்கிறத தன்னோட குடும்பம் பாக்கணும்னும் நினைச்சாரு

உடனே வீட்டுக்கு போன அவரு காலைல நடந்த சண்டைக்கு தான்தான் காரணம்னு சொல்லி தன்னோட மனைவிகிட்ட மன்னிப்பு கேட்டாரு ,உடனே அந்த மனைவியும் தங்க பங்குக்கு மன்னிப்பு கேட்டாங்க கொஞ்ச கொஞ்சமா அவரோட குடும்பமும் நல்ல அமைதியான குடும்பமா மாற ஆரம்பிச்சது

Exit mobile version