பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story:-விவசாயி ஒருத்தர் ஒரு குளிர்காலத்துல தன்னோட விவசாய நிலத்தை சுத்திபாத்துக்கிட்டு இருந்தாரு ,அப்ப அங்க ஒரு பாம்பு கிடக்குறத பாத்தாரு ,
அது குளிர் காலம்கிறதுனால அந்த பாம்பு ரொம்ப விறைச்சு போய் ,குளிர்தாங்க முடியாம கிடந்துச்சு
இரக்க குணம் அதிகமா இருந்த விவசாயிக்கு அந்த பாம்பை காப்பத்தனும்னு எண்ணம் வந்துச்சு ,உடனே அந்த பாம்ப எடுத்து ,தன்னோட நெஞ்சுல வச்சிக்கிட்டாரு
மெதுமெதுவா அந்த பாம்போட உடம்ப தடவி கொடுத்து அதுக்கு சூடேத்துனாரு ,மெதுவா குளிர்ல இருந்த விடுபட்ட பாம்பு சுய நிலைக்கு திரும்ப ஆரம்பிச்சது
அப்பத்தான் அத புடிச்சுகிட்டு இருந்த விவசாயிய நல்ல கடிச்சது அந்த பாம்பு ,பாம்போட விஷம் உடம்புல ஏறுனதால நடக்க முடியாம போன விவசாயி அப்படியே கீழ விளைந்துட்டாரு
கீழ விழுந்த விவசாயி பாம்ப பாத்து சொன்னாரு ,உன்னோட சுய நலத்த நினச்சு பக்காம உனக்கு உதவுனது என்னோட தப்புதான் ,அதுக்கு எனக்கு கிடைச்ச இந்த தண்டனையும் சரிதான்னு சொல்லிட்டு மயங்கி விழுந்தாரு விவசாயி