எலும்பு தூண்டும் நாயும் – Short story about a dog:- ஒரு ஊருல ஒரு நாய் குட்டி இருந்துச்சு ,அந்த நாய் ஒருநாள் கடை வீதிக்கு போச்சு
ரொம்ப பசியோட இருந்த அந்த நாய் சாப்பிடுறதுக்கு எதாவது கிடைக்குமான்னு தேடிக்கிட்டே போச்சு ,அப்ப அங்க ஒரு கறி கடைய பாத்துச்சு
அந்த நாய்க்கு ஒரே குஷியாகிடுச்சு ,அகா ஒரு கறி துண்டு கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினச்சு ,கீழ ஏதாவது கறி கிடக்கான்னு தேடி பாத்துச்சு
அப்பத்தான் ஒரு எலும்பு துண்ட பாத்துச்சு ,அடடா பெரிய எலும்பு துண்டு கீழ கிடக்கே இத எடுத்துட்டு போய் உடைச்சு சாப்பிடலாம்னு நினைச்சது
அந்த எலும்பு துண்ட எடுத்துக்கிட்டு வேகமா ஓடி தன்னோட வீட்டு பக்கம் போச்சு
அப்படி போகுறப்ப அங்க இருக்குற நதிய தாண்டும் போது தன்னோட பிம்பத்த நதி நீர்ல பாத்துச்சு
அடடா இது என்ன இன்னோரு நாய் என்ன மாதிரியே எலும்போட இருக்கே
இந்த நாய தொரத்திட்டா அந்த எலும்பும் நமக்கு கிடைக்குமேன்னு நினைச்சு கொலைக்க ஆரம்பிச்சுச்சு
வாய தொறந்த உடனே அந்த நாயோட வாயில இருந்த எலும்பும் தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு
அப்பத்தான் அந்த முட்டாள் நாய்க்கு தெரிஞ்சது ,அது இன்னொரு நாய் இல்ல தன்னோட பிம்பம் தான்னு
அப்பத்தான் பெரியவங்க சொன்ன “போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து ” அப்படிங்கிற பழமொழிக்கு அர்த்தம் புரிஞ்சது
தனக்கு கிடைச்ச எலும்பு துண்டு போதும்னு நினைச்சிருந்தா இப்படி வீனா எலும்பு தண்ணில விட்ருக்க வேனாமெனு நினைச்சு வருத்தப்பட்டுச்சு