Site icon தமிழ் குழந்தை கதைகள்

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை

woman standing on cliff

Photo by Min An on Pexels.com

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை :-தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதன் தனக்குள்ளாகவே தனது நம்பிக்கையையும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் அவற்றை ஊக்குவிக்கும் மனநிலையையும் கொண்டிருப்பதை குறிக்கிறது முருகருக்கு தன்னம்பிக்கையின் அளவு அதிகமாக இருக்கும் பொழுது அவர் மாறிவரும் இந்த கால சூழ்நிலையில் வெற்றிபெற்ற மனிதராகவே கருதப்படுகிறார் ஏனென்றால் தன்னம்பிக்கை உடைய ஒருவரே வாழ்வின் போராட்டங்களை பிறரது உதவியின்றி செய்து முடிக்க முடிகிறது

Photo by Pixabay on Pexels.com

 தன்னம்பிக்கை குறைவாக உள்ள ஒரு மனிதன் தனது போராட்டத்தின் பாதி வெளியில் இருக்கிறார் என்று பொருள்படுகிறது தனது வாழ்வின் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையை சந்திக்க தனது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே ஒருவருக்கு சிறந்த படியாக அமைகிறது

 தனது வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்பும் ஒரு சாமானிய மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளும் தன்னம்பிக்கை ஊட்டும் காணொளிக் காட்சிகள் மிகவும் உகந்ததாக இருக்கின்றன இதன்காரணமாகவே  இணையவழி தொடர்புகளில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழி என்ற பதத்தை அதிக நபர்கள் தேடி வருகின்றனர்

 தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள மனநிலையும் இருக்கும் ஒரு மனிதன் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை எட்டி பிடிக்க தன்னம்பிக்கையின் உதவி மிகவும் அவசியமாகும். மனித மனோநிலையில் எத்தனையோ பயங்களும் சங்கடங்களும் எப்போதும் உண்டு அவற்றை  தவிப்பதற்கு முதல்படியாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளல் மிக முக்கிய செயலாக கருதப்படுகிறது

 ஏழ்மை நிலையில் இருக்கும் மனிதர்கள் தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் அவர்கள் வைத்துள்ள பொருளாதார வசதிக்கு ஏற்ப நல்ல மனோ நிலையில் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்பது எழுதப்படாத வரலாறு ஆகும் எனவே ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளும் ஆகச் சிறிய செயல்களை செய்ய முற்படவேண்டும்

  பெற்றோர்கள் தமது குழந்தைக்கு கல்வி போதிக்க தொடங்கும் நாள் முதலாக தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் செயலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் ஏனென்றால் தன்னம்பிக்கை அதிகம் உடைய ஒரு குழந்தை பரவலாக நல்ல மதிப்பெண் நல்ல ஒழுக்கம் நல்ல கட்டுப்பாடுகள் தமக்குள்ளாகவே வளர்த்துக் கொள்கின்றனர் இவர்கள் தான் பின்னாளில் தேசத் தலைவர்களாகவும் தொழில்முனைவோர்கள் ஆகும் சமுதாயத்தில் உச்சகட்ட நிலைமை அடைந்த  மனிதர்களாகவும் மாறுகின்றனர் 

Exit mobile version