Rapunzel story in Tamil-அரக்கியும் தங்க கூந்தல் பெண்ணும் :- ஒரு மாய உலகத்துல ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க
அவுங்களுக்கு குழந்தை இல்லாததுனால தங்களுக்கு குழந்தை வேணும்னு வேண்டிகிட்டே இருந்தாங்க ,
அவுங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு அரக்கியோட அரண்மனை இருந்துச்சு
தங்களோட வீட்டுல இருந்து பாத்தா அந்த அரக்கியோட பூ தோட்டம் அவுங்களுக்கு தெரிஞ்சது ,ஒருநாள் அந்த பூ தோட்டத்துல இருந்து ஒரு பூ வேணும்னு அந்த மனைவி ஆசைப்பட்டு கேட்டாங்க
அத கேட்ட அந்த கணவன் தன்னோட மனைவியோட அசைய நிறைவேத்த ,அந்த அரக்கியோட தோட்டத்துக்கு போயி ஒரு பூவ பிடிக்கிண்டு வந்து கொடுத்தாரு
இத தெரிஞ்சிகிட்ட அரக்கி ரொம்ப கோபமானா ,அது எப்படி என்னோட தோட்டத்துல இருந்து பூ பிடுங்கலாம்னு
அந்த கணவன் மனைவி வசிக்கிற இடத்துக்கு வந்து சண்ட போட்டா அந்த அரக்கி
அப்ப அந்த அரக்கி சொன்னா என்னோட பூந்தோட்டத்துல இருக்குற பூ எல்லாம் எனக்கு குழந்தைகள் மாதிரி அத நீங்க எடுத்துட்டு வந்ததால உங்களுக்கு குழந்தை பெறந்துச்சுன்னா அத நான் எடுத்துட்டு போய்டுவேன்னு சொல்லிட்டு போய்ட்டா
பயந்து போன கணவனும் மனைவியும் பயந்துகிட்டே வாழ்க்கைய ஓட்டுனாங்க,கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அவுங்களுக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறந்துச்சு
அந்த குழந்தை பிறந்த உடனே பாத்தா அந்த குழந்தைக்கு அழகான தங்கநிற கூந்தல் இருந்துச்சு
அன்னைக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு அங்க வந்த அந்த அரக்கி குழந்தையை தூக்கிட்டு போய்ட்டா
குழந்தையை கொண்டு போய் தன்னோட அரண்மனையோட மாடியில போய் அடைச்சு வச்சுட்டா
கொஞ்ச காலத்துல அந்த குழந்தை வளர்ந்து பெரியவளா ஆனா ,அவளோட தங்க நிற தூந்தலும் ரொம்ப பெருசா வளர்ந்துடுச்சு
அரக்கி எப்ப எல்லாம் மாடிக்கு போகணும்னு தோணுதோ அப்ப எல்லாம் கீழ இருந்து கூப்பிடுவா ,உடனே மேல இருந்து தன்னோட கூந்தல வெளிய தூக்கி போடுவா அந்த பெண்
அந்த கூந்தல பிடிச்சி மேல ஏறி மாடிக்கு வருவா அந்த அரக்கி
அந்த பெண் மடியில அடச்சி வச்சதால அவள யாராலயும் பாக்க முடியாது ,அவளோட பொழுதுபோக்கே பாட்டு பாடிகிட்டே இருக்குறது தான்
ஒரு நாள் அந்த பக்கமா வந்த இளவரசர் ஒருத்தன் அந்த பாட்ட கேட்டான் ,யார் இவ்வளவு அழகா படுறதுன்னு தேடி பாத்தான்
அப்பத்தான் அந்த அரக்கியோட அரண்மனை அவன் கண்ணுக்கு தெரிந்தாச்சு ,அப்ப அந்த அரக்கி மாடிக்கு கூந்தலை பிடிச்சு ஏறி போறதையும் பாத்தா ,
அப்பத்தான் அந்த பெண்ணோட நிலைம அவனுக்கு புரிஞ்சது ,
கொஞ்ச நாளுக்கு அப்புறமா அங்க வந்த இளவரசன் ,அந்த பெண்கிட்ட வந்து தன்னை மேல வர அனுமதிக்க சொல்லி கேட்டான்
அரக்கி இல்லாததால அவளும் கூந்தலை வெளிய எடுத்து போட்டா ,அத பிடிச்சி மேல வந்த இளவரசர் அந்த பெண்ணோட கதையை கேட்டு ரொம்ப வறுத்த பட்டான் ,உன்ன நான் நாளைக்கு வந்து காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மீண்டும் கூந்தலை பிடிச்சி இறங்க ஆரம்பிச்சான்
இந்த காட்சிய தூரத்துல இருந்து பாத்தா அரக்கி ,அவளுக்கு ரொம்ப கோபமா வந்துச்சு ,மாடிக்கு வந்த அரக்கி அவளோட கூந்தல கத்திரிக்கோல் எடுத்துட்டு வந்து வெட்டிவிட்டா ,
இனிமே நீ எனக்கு வேணாம்னு சொல்லி பாலைவனத்துல கொண்டு போய் விட்டுட்டா அவள
மறுநாள் வந்த இளவரன் வந்து கூந்தல்ல ஏறுனா அவனை கொள்ளலாம்னு நினச்சு கூந்தலை அப்படியே தொங்க விட்டுட்டு காத்திருந்தா அரக்கி
அங்க வந்த இளவரசன் இது எதுவுமே தெரியாம கூந்தல பிடிச்சி மேல ஏற ஆரம்பிச்சான் ,அவன் மேல வந்ததும் கூந்தல வெட்டி விட்டா அரக்கி
மேல இருந்து கீழ விழுந்த இளவரசனுக்கு கண்ல அடிபட்டு கண்பார்வை போய்டுச்சு
அதுக்கு அப்புறமா மெதுவா நடக்க ஆரம்பிச்சான் இளவரசன் ,கண்தெரியாம ரொம்ப தூரம் நடந்த அந்த இளவரசன் அப்படியே பாலைவனம் பக்கமா போனான்
அப்ப அங்க இருந்த அந்த தங்க கூந்தல் பெண் அவன பாத்து வருத்தப்பட்டா ,எனக்கு உதவி செய்ய வந்து இப்படி ஆகிடுச்சேன்னு வறுத்த பட்டா அந்த அரக்கி
மெதுவா அந்த இளவரசனோட கைய தோட்டா ,அவன் கைய தோட்ட உடனே அந்த இளவரசனுக்கு தன்னோட கண் மெதுவா தெரிய ஆரம்பிச்சது
கண் பார்வை மீண்டும் கிடைச்ச அரசன் தன்னோட அரண்மனைக்கு அவளை கூட்டிட்டு போய் சந்தோசமா வாழ ஆரம்பிச்சான் கொஞ்ச நாளுக்கு அப்புறமா அவளுக்கு அவள மாதிரியே ஒரு அழகான பெண் குழந்தை பெறந்துச்சு ,அவளுக்கும் அழகான கூந்தல் இருக்குறத பாத்து எல்லாரும் சந்தோச பட்டாங்க