Site icon தமிழ் குழந்தை கதைகள்

Princess Isabella Kids Fairy Tale in Tamil – இளவரசி இசபெல்லா குழந்தைகள் மாயாஜால கதை

Princess Isabella Kids Fairy Tale in Tamil – இளவரசி இசபெல்லா குழந்தைகள் மாயாஜால கதை :- ஒரு பெரிய நாட்டுல ஒரு அழகான இளவரசி இருந்தா ,

அவளோட பேரு இசபெல்லா அவ அந்த நாட்டுலயே ரொம்ப அழாகான பெண்ணா இருந்தா

இசபெல்லா ஒருநாள் தோட்டத்து பக்கம் நடந்து போகும்போது ஒரு குகைய பார்த்தா

ரொம்ப ஆர்வமான இசபெல்லா மெதுவா அதுக்குள்ள போனா ,அங்க ஒரு வைரக்கல் இருந்துச்சு

அந்த கல் ரொம்ப அழகா இருந்ததால அந்த கல்ல மெதுவா எடுத்தா,உடனே அவள சுத்தி உலகம் சுத்த ஆரம்பிச்சுச்சு

திடீர்னு பார்த்தா அவ வேற உலகத்துக்கு வந்துட்டா,அப்ப அங்க ஒரு சூனியக்காரி வந்தா

ஏ பெண்ணே நீ எப்படி இங்க வந்தனு கேட்டுச்சு அந்த சூனியக்காரி,உடனே இசபெல்லா நடந்தத சொன்னா

இசபெல்லா அந்த சூனியக்காரிகிட்ட தன்னோட உலகத்துக்கு போக உதவி செய்யும்படி கேட்டா

உடனே அந்த சூனியக்காரி சொன்னா கொஞ்ச தூரத்துல ஒரு இடம் இருக்கு ,அந்த இடத்துல ஒரு பூ இருக்கு அந்த பூவ ஒரு டிராகன் பாதுகாத்துக்கிட்டு இருக்கு

நீ அந்த ட்ராகன ஏமாத்தி அந்த பூவ எடுத்தன்னா நீ உன் உலகத்துக்கு போகலாம்னு சொல்லுச்சு

உடனே இசபெல்லா தன்கூட வந்து அந்த பூவ எடுக்க அந்த சூனியக்காரிகிட்டயே உதவி கேட்டா ,அந்த சூனியக்காரியும் இசபெல்லா கூட வர ஆரம்பிச்சா

அப்ப சில மிருகங்கள் அந்த சூனியகாரிய நம்பாதனு சொல்லுச்சுங்க,ஆனா இசபெல்லா அந்த சூனிய காரிய ரொம்ப நம்புனா

கொஞ்ச தூரம் நடந்ததும் பிறகு அந்த பூ இருக்குற இடத்துக்கு போனாங்க ,அந்த ட்ராகன் ரொம்ப பெருசா இருந்துச்சு

அப்ப அந்த சூனியக்காரி சொன்னா நீ அந்த ட்ராகன திசை திருப்பு நான் அந்த பூவ எடுத்து கொடுக்குறேன்னு சொல்லுச்சு

உடனே ஒரு பெரிய குச்சியை எடுத்து அந்த ட்ராகன் முன்னாடி டான்ஸ் ஆடுனா இசபெல்லா ,உடனே அந்த ட்ராகன் அவள நோக்கி போச்சு

உடனே டக்குனு அந்த பூவை எடுத்துச்சு அந்த சூனியக்காரி,அப்பத்தான் அந்த சூனியக்காரி கேட்டா எல்லாரும் என்ன நம்ப வேணாம்னு சொன்னப்ப என்ன ஏன் நம்புனனு கேட்டுச்சு

அதுக்கு இசபெல்லா சொன்னா நான் எப்பவும் ஒருத்தரோட உருவத்தை பார்த்து அவரோட குணத்தை மதிப்பிட மாட்டேன் ,பூதாகரமா இருந்தாலும் உன்ன நம்புனதுக்கு அதுதான் காரணம்னு சொன்னா

இத கேட்ட சூனியக்காரி ரொம்ப சந்தோச பட்டு அந்த பூவ அவகிட்டயே கொடுத்துடுச்சு , அந்த பூவ வாங்குன இசபெல்லா உடனே அவளோட உலகத்துக்கு வந்துட்டா

Exit mobile version