Site icon தமிழ் குழந்தை கதைகள்

Pirates Story For Kids-Dem Bones – கடல் கொள்ளையர்கள்

Pirates Story For Kids-Dem Bones – கடல் கொள்ளையர்கள் :- ஒரு காலத்துல நிறய கடல் கொள்ளையர்கள் இருந்தாங்க ,அவுங்க தங்களோட காப்பல்லயே வாழ்ந்தாங்க

கடல்ல போற மத்த கப்பல்கள் எல்லாத்தையும் தாக்கி அதுல இருக்குற விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடிச்சு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்தாங்க

ஒருநாள் அவுங்களோட கப்பல்ல நிறய தங்கமும் வைரமும் பெருகி போச்சு , இனிமே கொள்ளையடிக்கிற பொருட்களை வைக்க கூட இடம் இல்லாம போச்சு

அதனால அந்த கடல் கொள்ளையர்கள் ஒரு தீவுல போய் அந்த தங்க வைர பொருட்கள் எல்லாத்தையும் புதைச்சு வைக்கலாம்னு முடிவு பண்ணுனாங்க

அதனால் ஒரு ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தீவ தேர்வு செஞ்சு தங்களோட பொருட்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அவுங்க கிட்ட இருந்த குட்டி படகுல ஏத்திக்கிட்டு அந்த தீவுல இருந்த ஆத்து வழியா தீவுக்கு உள்ள போனாங்க

அந்த தீவு நிறய மரங்களோட பெரிய காடா இருந்துச்சு ,அந்த கொள்ளையர்கள் எல்லாம் சேந்து அவுங்க கொள்ளையடிக்க பொருட்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ள போனாங்க

அந்த தீவுல எல்லா பொருட்களையும் புதைச்சு வச்சுட்டு திரும்ப தங்களோட கப்பலுக்கு போய்ட்டாங்க,கொஞ்ச காலத்துக்கு பிறகு அந்த கொள்ளையர்களை அரசாங்கம் கைது பண்ணி சிறையிலே அடைச்சிடுச்சு

ஆனா அந்த தீவுல இருந்த புதையல் அப்படியே இருந்துச்சு ,ரொம்ப வருசத்துக்கு அப்புறமா ரெண்டு சாமானியர்கள் அந்த தீவுக்கு வந்தாங்க

எதேச்சையா அந்த தீவுல இருந்த புதையல கண்டுபிடிச்ச அந்த ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ,ஆனா நாம கண்டுபிடிச்ச மாதிரி இந்த தீவ வேற யாராவது கண்டுபிடிச்சிடுவாங்களோனு அவுங்களுக்கு பயம் வந்துச்சு

அதனால் புத்திசாலியான அவுங்க பக்கத்து தீவு ,பக்கத்து நாடுகளுக்கு எல்லாம் போயி , கடல் கொள்ளையர்களோட ஆவி அந்த புதையல் தீவுல இருக்குனு புரளிய கிளப்பி விட்டாங்க

இந்த விஷயம் பக்கத்து நாட்டு அரசருக்கு தெரிஞ்சுச்சு ,அதனால் அவரு நிறய மண்டை ஓடுகளையும் எலும்பு கூடுகளையும் எடுத்துட்டு வந்து அந்த புதையல் இருக்குற எடத்துல வச்சாரு

கடல் கொள்ளையர்களோட ஆவி அங்க இருக்குனு புரளியை கிளப்புன அதே ரெண்டு சாமானியர்களுக்கு ஒருநாள் அந்த புதையல எடுக்க அங்க வந்தாங்க ,

புதையல் இருந்த இடத்துல இருந்த மண்டை ஓடுகளையும் எலும்பு கூட்டையும் பார்த்த அவுங்க ரெண்டுபேரும் உண்மையாவே கடல் கொள்ளையர்களோட ஆவி இங்க வந்துடுச்சுனு நினச்சு அலறி அடிச்சி அங்க இருந்து ஓடிட்டாங்க

அதுக்கப்புறமா அந்த பக்கத்து நாட்டு அரசர் ஒரு கப்பல எடுத்துட்டு வந்து அந்த புதையல் எல்லாத்தையும் எடுத்துட்டு போயி தன்னோட நாடு கஜானாவுல சேர்த்து ,நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய அத பயன்படுத்த ஆரம்பிச்சாரு

Exit mobile version